• April 3, 2025

திருட்டுப்போன 100 செல்போன்கள் மீட்பு- உரியவர்களிடம் ஒப்படைத்தார் ஆல்பர்ட் ஜான்

 திருட்டுப்போன 100 செல்போன்கள் மீட்பு- உரியவர்களிடம் ஒப்படைத்தார் ஆல்பர்ட் ஜான்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ்  நிலையங்களில் செல்போன் திருட்டு போனதாக பெறப்பட்ட மனுக்கள் மற்றும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த  வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு . ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்,

அதன்படி  சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் சூப்பிரண்டு சகாய ஜோஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர். சாந்தி தலைமையிலான போலீசார் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ ((IMEI)) எண்ணை வைத்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்து கண்டுபிடித்தனர்.

இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ்  நிலையங்களுக்கு தெரிவித்து ரூ 11 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மேற்படி பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து நேற்று அவற்றின்  உரிமையாளர்களிடம். ஆல்பர்ட் ஜான் ஒப்படைத்தார்

மேலும் இதுவரை ரூபாய் 1 கோடியே 13 லட்சத்து 3௦ஆயிரம்  மதிப்புள்ள 1085 காணாமல்போன செல்போன்களை தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு கண்டுபிடித்த சைபர் குற்றப்பிரிவு போலீசாரை ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

அதனை தொடர்ந்து சைபர் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும் எடுத்துரைத்து சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு 1830 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அல்லது oyherorime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்று

விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் செல்போன் தொலைந்து விட்டால் காவல் நிலையத்தில் புகார் அளித்த விவரங்களுடன் OEIR.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறும் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *