கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்கோவில் பங்குனி பெருந்திருவிழா 5 -ம் தேதி தொடக்கம்; நிகழ்ச்சிகள் முழு விவரம்

கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் பங்குனி பெருந்திருவிழா நாட்கால் விழா நடந்திருக்கும் நிலையில் 4 -ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் அங்குரார்ப்பணம் நடக்கிறது.
அதை தொடர்ந்து 5.4.2025 சனிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் மேஷ லக்கனத்தில் கொடியேற்றம் நடக்கிறது,மாலை 4 மணிக்கு திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப்பணி விடை ஸ்ரீ பலிநாதர் அஸ்திரதேவர் திருவீதி உலா நடைபெறும். அன்றைய மண்டகப்படிதாரர் : திருக்கோயில்.
இரவு 7 மணி பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி அம்மன் திருவீதி உலா மண்டபகப்படிதாரர் :பிராமணாள் சமூகம், கோவில்பட்டி

மறுநாள் முதல் நடக்கும் நிகழ்ச்சிகள் முழு விவரம் வருமாறு:-
6.4.2025
6.4.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சப்பரம் – பல்லக்கில் சுவாமி – அம்மன் திருவீதி உலா
இரவு 7 மணிக்கு பூத வாகனம் – காமதேனு வாகனம் சுவாமி – அம்மன் திருவீதி உலா மண்டபகப்படிதாரர் :
.அ.பூலோகப்பாண்டியத் தேவர், அ. ரத்தினவேல்ச்சாமித் தேவர்
இனாம்மணியாச்சி
மாலை 6மணிக்கு செ.சி.ராமபிரியா, சே.சி. யாழினி குழுவினரின் நடராஜரும் நடராஜர் பத்தும் பக்தி சொற்பொழிவு நடைபெறும்.

7.4.2025
7.4.2025 திங்கள்கிழமை காலை 8 மணிக்கு சப்பரம் – பல்லக்கில் சுவாமி – அம்மன் திருவீதி உலா
இரவு 7 மணிக்கு பூத வாகனம் – சிம்ம வாகனம் சுவாமி – அம்மன் திருவீதி உலா
மண்டபகப்படிதாரர் :இல்லத்துப்பிள்ளைமார் சமூகம், கோவில்பட்டி
8.4.2025
8.4.2025 செவ்வாய்கிழமைகாலை 8மணிக்கு சப்பரம் – பல்லக்கில்
சுவாமி – அம்மன் திருவீதி உலா
இரவு 7. மணிக்கு ரிஷப வாகனம் – ரிஷப வாகனம் சுவாமி – அம்மன் திருவீதி உலா குடவரை வாசல் தரிசனம்) மண்டபகப்படிதாரர் : மேடைத்தளவாய் கட்டளை, திருநெல்வேலி
9.4.2025
9.4.2025 புதன்கிழமை காலை 8 மணிக்கு சப்பரம் – பல்லக்கில் சுவாமி – அம்மன் திருவீதி உலா சுவாமி அம்மன் ஊடல்)
இரவு 7 மணிக்கு சப்பரம் – காமதேனு வாகனம் சுவாமி – அம்மன் திருவீதி உலா மண்டபகப்படிதாரர் :விஸ்வகர்ம தொழிலாளர்கள் சங்கம், கோவில்பட்டி.
இரவு 7 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்

10.4.2025
10.4.2025 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு சப்பரம் – பல்லக்கில் சுவாமி – அம்மன் திருவீதி உலா திருஞானசம்பந்த மூர்த்திக்கு ஞானப்பாலூட்டல்)
இரவு 7.00 மணிக்கு யானை வாகனம் – அன்ன வாகனம் சுவாமி – அம்மன் திருவீதி உலா (சமணர்கண் கழுவேறிய லீலை) மண்டபகப்படிதாரர் :
வே.சு.அழகிரிசாமி செட்டியார், காசுக்கடை, தூத்துக்குடி
மாலை 6 மணிக்கு குரு திருமதி. V. கனகலதா ஆறுமுகம் அவர்களின் பதஞ்சலி நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.
11.4.2025
11.4.2025 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு சப்பரம் – பல்லக்கில் சுவாமி – அம்மன் திருவீதி உலா
இரவு 7 மணிக்கு ஸ்ரீ நடராஜர் சப்பரத்தில் சிவப்புசாத்தி எழுந்தருளல் முதல்காலம் இரவு 11 மணிக்கு ஸ்ரீ நடராஜர் சப்பரத்தில் வெள்ளைசாத்தி எழுந்தருளல் இரண்டாம்காலம் ஸ்ரீ நடராஜர் சப்பரத்தில் பச்சைசாத்தி எழுந்தருளல்
(12.4.25 காலை 3வதுகாலம்) மண்டபகப்படிதாரர் : சைவவேளாளர்கள் சங்கம், கோவில்பட்டி
12.4.2025
பங்குனி மாதம் 29-ம் தேதி 12.4.2025 சனிக்கிழமை மாலை 4. மணிக்கு பூங்கோவில் – சப்பரம் – பல்லக்கில் ஸ்ரீ பிச்சாடநாதர் புறப்பாடு
மாலை 4 மணிக்கு குதிரை வாகனம் ஸ்ரீ சந்திரசேகரர் பரிவேட்டை புறப்பாடு
இரவு 7 மணிக்கு குதிரை வாகனம் – கிளி வாகனம் சுவாமி – அம்மன் திருவீதி உலா மண்டபகப்படிதாரர் : சைவசெட்டியார்கள் சங்கம், கோவில்பட்டி.
13.4.2025 தேர்திருவிழா
13.4.2025 ஞாயிற்றுக்கிழமை தேர்திருவிழா காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் ரதாரோகணம் காலை 9.00 மணிக்கு தேர்வடம் பிடித்தல் மண்டபகப்படிதாரர் : கம்மவார் சங்கம், கோவில்பட்டி இரவு 7.00 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி
இரவு 7 மணிக்கு யானை வாகனம் – அன்ன வாகனம் சுவாமி – அம்மன் திருவீதி உலா. மண்டபகப்படிதாரர் :வணிக வைசிய சங்கம், கோவில்பட்டி
14.4.2025 தீர்த்தவாரி
காலை 8 மணிக்கு சப்பரம் – பல்லக்கல் சுவாமி – அம்மன் திருவீதி உலா இரவு 6 மணிக்கு தீர்த்தவாரி தீபாராதனை
யானை வாகனம் – அன்னவாகனம் சுவாமி – அம்மன் திருவீதி உலா
இரவு 12.மணிக்கு ரிஷப வாகனம் – ரிஷப வாகனம் சுவாமி – அம்மன் திருவீதி உலா
மண்டபகப்படிதாரர் :ஆயிர வைசிய காசுக்காரச் செட்டிப் பிள்ளைகள் சங்கம், கோவில்பட்டி.
15.4.2025 தெப்பத்திருவிழா
மாலை 5 மணிக்கு ரிஷப வாகனம் – ரிஷப வாகனம் சுவாமி – அம்மன் திருவீதி உலா
இரவு 7 மணிக்கு சுவாமி – அம்மன் திருக்குளத்தில் பவனி வருதல்
மண்டபகப்படிதாரர் :கோவில்பட்டி நாடார் உறவின் முறைச் சங்கம் கோவில்பட்டி
இரவு 7. மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி.எஸ்.ஏ.ராஜகுரு அறங்காவலர்கள் சுபாஷ். கை.சண்முகராஜ் தி.நிருத்தியலட்சுமி (எ) சுதாபூ.சு.திருப்பதிராஜா செ.ரவீந்திரன் செயல் அலுவலர் கி.வெள்ளச்சாமி ஆகியோர் செய்து வருகிறார்கள்.
