பயிர் விளைச்சலை துரிதப்படுத்தும் `ஆட்டு எரு’

இன்றைய கால கட்டத்தில மிகப்பெரிய அச்சுறுத்தலாக மனித சமுதாய த்திற்கு பல்வகையான கொடிய நோய்கள் ( கேன்சர் குழந்தையின்மை ) உண்டாகின்றன இந்த பிரச்சனைகளின் ஆணி வேராக நாம் உண்ணும் உணவு உற்பத்தி முறையில் ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லிகள் அளவுக்கதிகமாக கலப்பதால் தான்.
.மனிதன் விளைச்சலை பெருக்கிட கண்ட கண்ட உரங்களை பயன்படுத்திடுவதால் தான் விளைச்சலில் முன்னுக்கு வந்தநாம் நாற்பது வயதிலேயே மருந்து மாத்திரைகளை அள்ளி போடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.
ஆட்டு எரு ( ஆட்டு புழுக்கை)
அந்த வகையில் ரசாயன உர பயன்பாட்டை தவிர்க்க அந்த காலத்தில் நாம் முன்னோர்கள் ஆட்டு கிடையை கோடை உழவுக்கு பின் நிலத்தில் அமர்த்துவார்கள்.
ஆட்டுகிடை போடுவதெற்கென இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த கீதாரிகள் தங்களுடைய ஆட்டுமந்தைகளை தமிழகத்தின் பல்வேறு பகுதியில் தங்கி அந்த பணியை மேற்கொள்ளுவார்கள் அந்த காலத்துல அள்ளிக்கொடுத்த நிலங்கள் இன்று மண்வளம் கெட்டு இறுகி போய் கிள்ளிக் கொடுக்கின்றன.
கிடை அமர்த்துதல்
100ஆடுகள் உள்ள கிடையை ஒரு நாள் இரவு நிலத்தில் அமர்த்தினால் அந்த எரு ஒரு ஏக்கருக்கு வேண்டிய வளத்தை கொடுக்கும்.
அந்த வகையில் மாட்டு சாணத்தை விட ஆட்டு எருவில் இரண்டு மடங்கு தழைசத்தும், சாம்பல் சத்தும் உள்ளது.அது மட்டுமல்லாது 60-70% தண்ணீரும் 2% தழை சத்து, 0.4% மணிசத்து, 1.7% சாம்பல் சத்தும் உள்ளது.மேலும் பயிர்களின் வளர்ச்சி தேவையான நுண்ணூட்ட சத்துகளான தாமிரம் துத்தநாகம் போரான் மெக்னிசியம் உள்ளிட்ட சத்துகளும் உள்ளன.
இவை மண்வளத்தை மாற்றி பயிர் விளைச்சலை துரிதபடுத்துவதால்
என்னவோ ” ஆட்டு எரு அவ்வருஷம் மாட்டு எரு மறு வருஷம் ” என்ற பழமொழி உருவானது போல.
ஆட்டு எருக்களின் சத்து களின் அளவு ஆட்டு ரகங்கள், மற்றும் அவைகளுக்கு அளிக்கபடும் தீவனத்தை பொறுத்தே இருக்கும்.
ஆடுகளுக்கு புரத சத்து நிறைந்த தீவனங்களை அளிக்கும் போது எருவில் ( ஆட்டு புழுக்கையில்) தழைசத்து அளவு குறைந்தே இருக்கும்.ஆனால் ஆட்டின் சிறுநீரில் தழைசத்து அதிகமாக இருக்கும்.
ஒரு ஆடு ஒரு நாளில் எவ்வளவு சிறுநீர் / புழுக்கை போடும்?
ஆடு 10- 40மி.லி ட்டர் வரை இருக்கும்.
சாணத்தின் அளவு 1- 2.5கிலோ வரை இருக்கும்.

ஆட்டு எரு இடும்முறை
1) பச்சையாக இடுவது ( FRESH MANURE .அப்படி பச்சையாக இடுவதால் களைகள் மற்றும் நோய்கிருமி உண்டாகும்.
2) நாள்பட்ட எரு ( AGEDMANURE ).
நாள்பட்ட எரு காய்ந்து போய் காணப்படும் சில சத்துகள் ஆவியாக காற்றுடன் கலந்துவிடும்.
3) COMPOSED MANURE
இந்த முறையில் நன்றாக மக்கி மண்ணின் தன்மைகேற்ப மண்ணுடன் கலந்து மண்ணின் கரிமசத்தை அதிகரிக்க உதவும்..
இன்றைய கால கட்டத்தில் ஆட்டு கிடையின் நிலமை
இன்றைய கால கட்டத்தில நவீன மாகி வருவதால் ஆடு மாடு மேய்த்தல் பணி யை இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புவதில்லை அதற்கு நேர்மாறாக ஆட்டு பண்ணை அமைக்க பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசு மேற்கொள்ளுவதால் வீடுகளிலே ஆட்டு பண்ணை அமைத்து வருகின்றனர் ஆட்டு சாணங்கள் இன்று அமேசான் , பிளிப் காட் போன்ற இணைய தளங்கள் வாயிலாக விற்பனை செய்து வருகின்றனர்.அந்த வகையில் ஆட்டு புழுக்கைகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது
எனவே மக்கிய ஆட்டு உரத்துடன் அசோஸ்பைரில்லம் பாஸ்போ பேக்டிரியா கலந்து ENRICHED MANURE யாக மாற்றி விற்பனை செய்ய படுகிறது.
இன்னும் மானாவாரி பயிரிடப்படும் நிலங்களில் ஆங்காங்கே கிடை அமர்த்தும் பழக்கம் இருந்து வருகிறது.
அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை
