நாளை முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் 100 டிகிரி பாரன்கீட்டை தாண்டியது. இந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் நாளை 3ந் தேதி 5 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் 4, 5ம் தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி உள்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
