திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகில் உள்ள நத்தமேடு கிராமத்தில் எம்.ஜி.ஆருக்கு ஆலயம் அமைத்து அவரது பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர் கலைவாணன் குடும்பத்தினர் முயற்சியில் எம்.ஜி.ஆரை நேசிக்கும் அவரது தொண்டர்கள் பக்தர்கள் ஒத்துழைப்பில் எம்.ஜி.ஆர். ஆலயம் உருவானது.தற்போது இந்த ஆலயத்தின் நுழைவாயில் திருக்கோபுரம் அமைக்கப்பட்டு ஆலயத்தின் உள்ளே எம்.ஜி.ஆர். திருஉருவ சிலை கர்ப்ப கிரகத்தில் நிறுவப்பட்டு இதற்கான மகா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. […]
இலவச திட்டங்களை முறைப்படுத்தக்கோரி அஸ்வினி குமார் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த பொதுநல மனுவை சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.இன்றைய விசாரணையின் போது, இலவச திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை திவால் நிலைக்கு இட்டுச்செல்லும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. மத்திய அரசின் சார்பிலும் இதே வாதம் முன்வைக்கப்பட்டது.அப்போது தலைமை நீதிபதி, தேர்தலின் போது இலவச வாக்குறுதிகளை அளிக்கவேண்டாம் என கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எப்படி உத்தரவிட முடியும் என்ற […]
அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதற்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்து ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலை கட்சியில் தொடர வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார். \இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தங்களது தரப்பு வாதங்களையும் கேட்ட […]
திண்டுக்கல்லில் தமிழ்நாடு காவல்துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடந்தது. கூட்டத்தில் போலீஸ் பண்டகசாலையில் விற்கப்படும் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும். இலவச பஸ் வசதி. பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குஜராத் மாநிலத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கர்நாடக மாநிலம் வழியாக சுற்றுலா பஸ் மூலம் கொடைக்கானல் வந்தனர். அங்கு பல்வேறு சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இன்று காலை அதே பஸ்சில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.கொடைகானல் மலைப்பாதையில் டம்டம் பாறை அருகே சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அந்த பள்ளத்தில் அதிக அளவில் மரங்கள் வளர்ந்து காணப்படுவதால், பஸ் பள்ளத்தில் அடிப்பகுதிக்கு செல்லாமல் மரங்களுக்கு […]
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா. தற்போது படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுசுக்கு தாத்தாவாக இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ளார். இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது மட்டுமின்றி பாராட்டுகளைப் பெற்று வருகிறதுஇந்நிலையில், இன்று காலை பாரதிராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவரை சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பாரதிராஜாவுக்கு மருத்துவ […]
தமிழ் நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-நமது 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஊராட்சிகளின் அதிகாரங்களை மீட்பதற்கும் மாநில தழுவிய உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 14.9.2022 புதன்கிழமை காலை 10மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறும் .அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பெண் தலைவர்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டு நமது உரிமைகளை வென்றெடுக்க உதவிடுமாறு மாநில […]
சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜெபஸ்டின் ராஜ். இவரது மனைவி, மகன் ஆண்டனி ஜான் (வயது 14) மற்றும் மகள் ஏஞ்சலின். இவர்கள் மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திருவிழாவுக்கு சென்றிருந்தனர்.திருவிழா முடிந்த பின்னர் நேற்று இரவு அரசு பஸ்சில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது, விருதுநகர் மாவட்டம் அழகாபுரி அருகே சாலை ஓரத்தில் இருந்த உணவகத்தில் உணவுக்காக பஸ் நிறுத்தப்பட்டது.அந்த உணவகத்தில் அவர்கள் சாப்பிட்டனர். அப்போது ஆண்டனி ஜானுக்கு அவரது தாயார் குளிர்பானம் வாங்கி […]
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகில் உள்ள நத்தமேடு கிராமத்தில் எம்.ஜி.ஆருக்கு கோவில் அமைத்தது அவரது பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். 12 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆரை உயிரென நேசிக்கும் குடும்பத்தை சார்ந்த கலைவாணன், சாந்தி கலைவாணன் அவர்களின் மகள் சங்கீதா ஆகியோர் எம்.ஜி.ஆர் பக்தர்களின் அன்போடும் ஆதரவோடும் அவர்களின் முழு ஒத்துழைப்போடும் எம்.ஜி.ஆர். கோவிலை உருவாக்கி பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள்.அந்த கோவிலின் நுழைவாயிலில் கோபுரம் ஒன்று அமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் அறிவிப்பு செய்தனர். […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: நீதிபதி விசாரணை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு 3000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை 2022 மே மாதம் 18-ந் தேதி தமிழக முதல்-அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. ஆனால், இதுவரையில் தமிழக அரசு அந்த அறிக்கையை வெளியிடவில்லை.இந்நிலையில், நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணைக் குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







