• May 20, 2024

தமிழ்நாட்டில் ஆரஞ்சு அலர்ட்; 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

 தமிழ்நாட்டில் ஆரஞ்சு அலர்ட்; 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில இன்று கனமழை பெய்ய வாய்ப்புகள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இன்று அதிகாலையில் இருந்தே இந்த மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக கத்திப்பாரா சுரங்கப்பாதையில் மழை நீர் குளம் போல் தேங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை முதல் கனமழை வெளுத்து வாங்குகிறது.
சென்னை திரு.வி.க. நகரில், நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் சன்செட் இடிந்து விழுந்ததில் காய்கறி வியாபாரி சாந்தி உயிரிழந்தார். சென்னை மாநகராட்சி பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதாக இதுவரை 154 புகார்கள் வந்துள்ளன. 21 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 50க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுகிறது 25 இடங்களில் மரம் விழுந்த நிலையில் 17 இடங்களில் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *