மறைந்த தலைவர்களை கொச்சைப் படுத்துவதை நிறுத்த வேண்டும்; அண்ணாமலைக்கு டி.ஜெயக்குமார் வேண்டுகோள்
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா 115 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சென்னை அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி, தலைமை நிலைய […]







