திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சத்தியபாமா, நாம் தமிழர்கட்சி சார்பில் கார்த்திகா உள்பட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் என 22 பேர் போட்டியிட்டனர். வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் மேற்கொண்டார். நாம் தமிழர் கட்சி வேட்பாளரும், மாநில மகளிர் அணி செயலாளருமான கார்த்திகா, தேர்தலின்போது கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து, முதல்-அமைச்சர் ரோடு ஷோ […]
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், 37 மாவட்டங்களில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் முதல்கட்டமாக 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2025 ஜனவரி 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அங்கு தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், உள்பிரகாரங்கள், சண்முக விலாச மண்டபம் உள்ளிட்ட 45 இடங்களில் பக்தர்கள் தங்கள் காணிக்கையை செலுத்துவதற்காக நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது காணிக்கைகளைச் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோயில் அர்ச்சகர் முத்தன்ஐயர் (வயது 65), மூலஸ்தானத்திற்கு முன்புள்ள உண்டியலில் கடந்த அக்டோபர் 2, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கையை உள்ளே விட்டுப் பணத்தை திருடியது கோவில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதேபோல, புதுச்சேரி ஆர்யாகுப்பத்தைச் […]
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே மனோகரன், பொதுச் செயலாளர் செந்தில் ராஜ்குமார் ஆகியோர் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது :- ஆந்திர பிரதேசம் மாநிலம் காக்கிநாடாவில் அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை தென் மண்டல சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் பெண்கள் ஆக்கி லீக் போட்டி நடைபெற உள்ளது இப்போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா கேரளா, புதுச்சேரி மாநில அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளன. […]
கோவில்பட்டி முத்தானந்தபுரம் மடம் என்பது ஒரு ஆன்மீக ஸ்தலமாகும். இந்த மடத்தின் மடாதிபதியாக சொரூபானந்த சுவாமிகள் இருந்து வந்தார். கோவில்பட்டியில் நடைபெறும் பள்ளி ஆண்டு விழாக்கள், மத நல்லிணக்க நிகழ்ச்சிகள், மற்றும் பொது நலக் கூட்டங்களில் இந்த மடத்தின் சார்பில் சுவாமிகள் கலந்துகொண்டு ஆசி வழங்கி வந்தார். கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் பின்புறம் முத்தானந்தபுரம் பகுதியில் இந்த மடம் அமைந்துள்ளது. வயது முதிர்ச்சி காரணமாக சில மாதங்களாக உடல்நலம் குன்றி காணப்பட்டார். இந்த நிலையில் இன்று […]
மும்பையை சேர்ந்த பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப். 36 வயதான இவர், கார் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார். ‘பாகி’, ‘பாகி-2’. ‘வார்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நேற்று மாலை டைகர் ஷெராப் ஜூகு புஷ்பா பார்க் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்துக்கு சென்றார். இதுபற்றி அறிந்து அவரது ரசிகர்கள் மைதானம் அருகில் குவிந்தனர். விளையாடி முடித்துவிட்டு டைகர் ஷெராப் காரில் வெளியே வந்தார். அப்போது ரசிகர்கள் திரண்டு இருந்த பகுதியில் அவரது கார் […]
ஹில் சாரிட்டி நிறுவனர் பிரைனா பிரேம் பிரபாகரன் மற்றும் , கைரா டெக்னாலஜிஸ் நிறுவனர் செல்வலட்சுமி சிவந்திராஜா ஆகியோர் இணைந்து `திஷார் ஈவென்ட்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். தொகுத்து வழங்குதல், ஒருங்கிணைத்துக் கொள்ளுதல், கொண்டாடுதல் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரின் திறமைகளை அங்கீகரிக்கும் வகையில் மாவட்ட வாரியாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி பெருமைப்படுத்தும் விதமாக இந்த நிறுவனம் செயல்பட இருக்கிறது. அந்த வகையில் நிறுவனத்தின் லோகோ மற்றும் அடுத்தடுத்து நடக்க […]
சீனா, வியட்நாம் மற்றும் இந்தியாவை இணைக்கும் வகையில் ரீஜினல் கன்டெய்னர் லைன் நிறுவனம் மூலம் சீனாவில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி சரக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சீனா, வியட்நாம் மற்றும் இந்தியாவை இணைக்கும் வகையில் ரீஜினல் கன்டெய்னர் லைன் நிறுவனம் மூலம் நேரடியாக சீனா, வியட்நாம் வழியாகத் தூத்துக்குடிக்குச் சரக்கு கப்பல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முதல்முறையாக […]
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒரு விளம்பரத்தை பார்த்து ஆன்லைன் மூலம் ரூ.50 செலுத்தி ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அடுத்த 2 நாட்களில் அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணை 2 மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் லாட்டரி சீட்டில் உங்களுக்கு ரூ.1.25 கோடி பரிசு விழுந்து இருக்கிறது.அதனைப் பெற ஜி.எஸ்.டி., டி.டி.எஸ்., என்.ஓ.சி. ஆகிய செலவுகளுக்கு ரூ.3½ லட்சம் அனுப்புமாறு கூறினர். இதனை நம்பிய அந்தப் பெண், ஜிபே மற்றும் […]
கம்மவார்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; கம்மநாயுடு மகாஜன சங்க நிர்வாகிகள் கூட்டத்தில்
தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஐன சங்கத்தின் தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியை அடுத்த திருவேங்கடம் அர்ச்சனா மினி மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருவேங்கடம் மண்டல தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ( தெற்கு) சின்னச்சாமி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் தேனி , ராஜபாளையம் , சிவகாசி , சாத்தூர் , கோவில்பட்டி , திருவேங்கடம் , சங்கரன்கோவில் , கழுகுமலை , தூத்துக்குடி , எட்டையாபுரம் , விளாத்திகுளம் , மதுரை, விருதுநகர் மண்டல […]







