கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில், இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று (25.10.2026) ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும், அதனைத் தொடர்ந்து 6 மணிக்குமேல் சிறப்பு ஹோமமும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, அம்பாள் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் ரேவதி நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 7மணி முதல் 7:25 மணிக்குள் துலா லக்னத்தில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5:30 மணிக்கு வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாற வாய்ப்பு உள்ளது. நாளை (அக்டோபர் 25) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக் கடலில் உருவாகக்கூடும். நாளை […]
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன் 1974-77 ம் ஆண்டு கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ஒவ்வொரு மாதமும் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகின்றன. அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான இலவச கண் பரிசோதனை முகாம் நாளை 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பாதைகளில் கடுமையான பனிமூட்டமும், ஆங்காங்கே நிலச்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கனமழையினால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, தேனி மாவட்டத்தை இணைக்கும் கொடைக்கானல் – அடுக்கம் மலைப்பாதை தற்காலிகமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது. தற்போதைக்கு வத்தலக்குண்டு மலைப்பாதை வழியாக மட்டுமே அத்தியாவசிய வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், கடுமையான […]
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் 2வது கைலாபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் ராமன் என்ற ராபின். இவரது மகன்கள் இஸ்ரவேல் (50) மற்றும் சாமுவேல் (45). இவர்கள் இருவரும் சமையல் மாஸ்டர்களாக வேலை பார்த்து வந்தனர். இருவரும் மதுபோதைக்கு அடிமையானவர்கள் என்பதால், இவர்களது மனைவிகள் அவர்களை பிரிந்து சென்றுவிட்டனர். இந்நிலையில், நேற்று இரவு மதுபோதையில் இருந்த இஸ்ரவேல் மற்றும் சாமுவேல் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இஸ்ரவேல், சாமுவேலைக் கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த […]
கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மலை ரெயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று, மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் 14 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், இரு சாலைகளிலும் போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. இதனையடுத்து, சாலைகளை சீரமைக்கும் பணிகள் தற்போது நடந்து […]
தென்மண்டல சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் பெண்கள் ஆக்கி போட்டி காக்கிநாடாவில் வருகிற 27ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது இப்போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, தெலுங்கானா, ஆகிய மாநிலங்கள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன. இப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான சப் ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு கடந்த இரண்டு நாட்களாக கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நடந்து வந்தன. இந்த […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பழைய பேருந்து நிறுத்தம் அருகே காமராஜர் சிலை பகுதியில், கடந்த 20.10.2026 அன்று பைக் ரேஸ் என்ற பெயரில் அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பியும் இருசக்கர வாகனங்களில் சென்ற 4 நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சாத்தான்குளம் ஞானியார்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்களான செல்வராஜ் மகன் தமிழரசன் (22), மோகன் மகன் முத்து (19), நடராஜன் மகன் கோகுலகண்ணன் (21) மற்றும் பட்டுராஜ் மகன் தனுஷ் சூர்யா […]
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட தட்டார்மடம் காவல் நிலைய எல்லையான முதலூர் பகுதியில், நேற்று 22-ஆம் தேதி இரவு நடந்த மோதலில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டார். முதலூரைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (வயது 43) என்பவரது குடும்பத்தினருக்கும், சாத்தான்குளம் ஆனந்தபுரத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாஷ் (23) என்பவருக்கும் இடையே, முத்துக்கிருஷ்ணனின் 15 வயது மகள் காதல் விவகாரத்தில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடுகளும் தகராறுகளும் ஏற்பட்டு வந்தன. […]
மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் தொடர்ச்சியாக நீர் நிலைகளை பாதுகாக்க, மண்ணரிப்பை தடுக்க தூத்துக்குடி மாவட்டம் அம்மன் புரம் அருகே உள்ள குளத்தங்கரையில் பனை விதைகள் நடும் பணியை இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு, கிரீன் தமிழ்நாடு மிஷின், பசுமை தமிழகம், மாவட்ட வனத்துறை, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மதர் சமூக சேவை […]







