• November 16, 2026

Month: October 2026

செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்; முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்  அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டிற்கும் முக்கியப் பங்களிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், 2025–26ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்கிட […]

கோவில்பட்டி

திட்டங்குளம் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை

கோவில்பட்டி திட்டங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகம் (தனியார் தினசசி சந்தை) செயல்பட்டு வருகிறது. அதிகாலையில் வெளியூர்களில் இருந்து லாரிகளில் காய்கரிகரிகள் உள்ளிட்ட பொருட்கள் வந்து இறங்கும்,. மொத்த கடைக்காரார்கள் அவற்றை இறக்கி வைத்து சில்லறை வியாபாரிகளுக்கு விறபனை செய்வார்கள்/ கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வியாபாரிகள் திட்டனக்குளம்  சந்தைக்கு வந்து காய்கறிகள் வாங்கி செல்வார்கள்./ இதனால் இரவிலேயே சுமை தூக்கும் தொழிலாளர்கள் சந்தைக்கு வந்து தங்கி இருப்பார்கள். அது போல் சுமை தூக்கும் தொழிலாளிகள்  […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சர்வதேச போலியோ  விழிப்புணர்வு கருத்தரங்கு

கோவில்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரியில் சர்வதேச போலியோ விழிப்புணர்வு தின கருத்தரங்கு நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் உரிய வயதில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாணவிகளுக்கு விழிப்புணர்வு வால்போஸ்டர்கள் வழங்கப்பட்டது. போலியோ தொடர்பான கேள்வி பதில்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவிகள் போலியோ குறித்த விழிப்புணர்வு ரங்கோலி கோலம் வரைந்தனர். நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கதலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார், ரோட்டரி […]

செய்திகள்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி திட்டத்தின் முதல் அணிக்கான பயிற்சி முகாம்; மாமல்லபுரத்தில்

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, இன்று (27.10.2026) செவ்வாய்க்கிழமை, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் ஜே/.சி,.டி,.பிரபாகர் முன்னெடுப்பில், சட்டமன்ற உறுப்பினர்களின் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்தின் முதல் அணிக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் தொடங்கியது. இந்நிகழ்வில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர்  என்.ஆனந்த் பங்கேற்றார்.! இரண்டு நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமில், முதல் அணி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, மக்கள் நலன் சார்ந்த […]

தூத்துக்குடி

கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்கற்குளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கி ராஜா (20) என்ற கல்லூரி மாணவரை  நேற்று (25.10.2026) இரவு மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கினர்.  இதில் படுகாயமடைந்த இசக்கிராஜாவை அப்பகுதி மக்கள் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார்  சம்பவ இடத்திற்குச் சென்று, விசாரணை மேற்கொண்டனர், மேலும் மருத்துவமனையில்  உயிரிழந்த இசக்கிராஜாவின் உடலைப் பரிசோதனைக்காக […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை சம்பவங்கள் 9.2% குறைவு; மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்   வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்ததில், இச்சம்பவங்கள் தனிப்பட்ட, குடும்ப மற்றும் சிவில் பிரச்சினைகள் காரணமாக நிகழ்ந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.இச்சம்பவங்கள் குறுகிய கால இடைவெளியில் நடைபெற்றிருந்தாலும், ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. உள்ளூர் அளவிலான பிரச்சினைகள் மற்றும் திடீர் ஆத்திரம் காரணமாக இவை நிகழ்ந்துள்ளன.ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் நடைபெற்ற கொலைகள் முறையே கழிவுநீர் வடிகால் மற்றும் பாதை தொடர்பான […]

செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்கினால் மின்னனு பண பரிவர்த்தனை; நவம்பர்

டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 4,048 மதுபானச் சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் விற்பனைத் தொகை ரொக்கமாகவும், யு.பி.ஐ. மற்றும் விற்பனை முனையக் கருவி (கார்டுகள்) மூலமாகவும் பெறப்படுகிறது. இருப்பினும் விற்பனைத் தொகையின் பெரும்பகுதி ரொக்கமாகவே பெறப்படுகிறது. ரொக்கப் பணத்தைக் கையாள்வதால் கடைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ரொக்கப் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காகப் பணியாளர்கள் பயணம் செய்ய வேண்டியிருப்பதால், […]

செய்திகள்

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், புழல் சிறையில் அடைப்பு

ரூ. 100 கோடி ஊழல் வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து அன்பில் மகேஷ் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்குப்பின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல். எஸ். சத்யமூர்த்தி முன் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேசை விசாரணைக்கு எடுக்க அனுமதிக்குமாறு போலீசார் தரப்பில் வாதிடப்பட்டது. அதேவேளை, […]

சினிமா

100 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு புகார்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்

கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 16-ந்தேதி அன்பில் மகேசுக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் […]

செய்திகள்

தமிழகத்தில் இடி, மின்னலுக்கு 14 பேர் பலி ; அமைச்சர் செங்கோட்டையன் தகவல் 

நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் மீட்புப் பணிகள் குறித்து, சென்னையில் அவசரகால செயல்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- தமிழகத்தில் இடி, மின்னல் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் கனமழையால் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரு.ம்பியது. நீலகிரி மண் சரிவில் சிக்கி உயிரிழந்த டிரைவரின் […]