தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப்-2,மற்றும் குரூப் 2ஏ பிரிவுகளைச் சேர்ந்த 846 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் ஒரு காலிப்பணியிடத்திற்கு சராசரியாக 579 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 1,647 மையங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 173 தேர்வு மையங்களில் 51 ஆயிரத்து 721 பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நிலைத் தேர்வு […]
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் விழாவும், 64-வது குருபூஜையும் இன்று நடைபெற்றது, வருகிறது. இதனை முன்னிட்டு அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளசீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் “சீமானின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என பலரும் என்னிடம் தெரிவிக்கின்றனர். அதன் அடிப்படையிலேயே போட்டியிடுகிறேன். நாம் தேர்தலில் போட்டியிடுவதில் தலைவர்களையும், இயக்கங்களையும் சார்ந்து இல்லை. என்னை ஒரு தடவையாவது […]
தூத்துக்குடியில் பிரமாண்ட கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் கொரியாவை சேர்ந்த ‘எச்.டி கொரியா கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் என்ஜினீயரிங்’ நிறுவனம், மத்திய அரசு, தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகம் ஆகியவை இணைந்து ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியாவை உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக மாற்றுவதும், நவீன தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும்தான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் அதா வது இன்றைய மதிப்பில் […]
கடந்த ஆகஸ்ட் மாதம் கோயமுத்தூரில் நடைபெற்ற தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் 45 பேர் இந்திய அணிக்கு தேர்வு செய்வதற்கான பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து 3 வீரர்கள் இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த 3 வீரர்களும் கோவில்பட்டியில் உள்ள சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ் எஸ் துரைசாமி மாரியம்மாள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு விளையாட்டுத்துறை மாணவர் கே. […]
கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி வடக்கு புதுகிராமம் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் (57/26) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி முருகன் நேற்று (29.10.2026) தீர்ப்பு வழங்கினார். ரவிசங்கரை குற்றவாளி என உறுதி செய்து […]
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் வைத்திருந்த செல்வ மாரியப்பன் (45), முத்துவேல் (40) மகேஷ் (35) ஆகியோர் சீக்கினர்கள். அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். சோதனையின்போது 330 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில், உள்தர மதிப்பீட்டுக் கழகம் (IQAC) மற்றும் நிறுவன புத்தாக்கக் குழு(IIC) இணைந்து ‘செயற்கை நுண்ணறிவுக்குத் தயாரான கல்வியாளர்: தேசியக் கல்விக் கொள்கையுடன்` ஒருங்கிணைந்த கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தர உறுதிப்பாடு ‘ என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் கல்லூரிச் செயலர் பா.மகேந்திரன் அறிவுறுத்தலின்படி ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இயற்பியல் துறைத்தலைவரும் உள்தர மதிப்பீட்டுக்கழக ஒருங்கிணைப்பாளருமான பெ.சித்ரலேகா வரவேற்று பேசினார். முதல்வர் அ.பாண்டியராணி தலைமை தாங்கினார். தாவரவியல் சுயநிதிப்பாடப்பரிவுகளின் […]
சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற இசக்கி சுப்பையா, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதனால் காலியாக உள்ள அம்பாசமுத்திரம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நெல்லையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது;- இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 5 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். […]
தூத்துக்குடியில் மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் நிறுவனம் இணைந்து சிறப்பு தொழிற்கடன் வசதியாக்கல் முகாமை நடத்தின. முகாமில் 75 பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி மானியத்துடன் 46.56 கோடி தொழிற் கடன் வழங்கபட்டது. இதற்கான ஆணைகளைகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன்ராஜா, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலையில் வழங்கினார். 2026-27 நிதியாண்டு கடன் இலக்கு: ரூ.6,482.19 கோடி• 30.9.2026 வரை 14,291 நிறுவனங்களுக்கு ரூ.4,494.33 கோடி கடன் […]
திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம். பி. தனது எக்ஸ் (வளைதளம்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “நேற்றைய தினம் தூத்துக்குடி கந்தன் காலனியில், வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நான்கு நாட்களில் ஏழு கொலைகள் எனத் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து, பொதுமக்கள் கடுமையான அச்சத்தில் உறைந்துள்ளனர். ‘முத்துநகரம்’ என்று அன்போடு அழைக்கப்படும் தூத்துக்குடியை, ‘கொலை நகரம்’ என்று அழைக்கும் நிலைக்குத் தவெக அரசு தள்ளியுள்ளது. மீண்டும் சொல்கிறேன்… […]







