• November 16, 2026

Month: October 2026

செய்திகள்

தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது ; மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- எம்.எல்.ஏ.வை ஷாப்பிங் செய்வதில் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட ஷாப்பிங் செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா? . தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டேன். 4 மாதம் முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளது. அன்றாடச் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?. இந்தியா […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவிப்பு

அண்ணல் காந்தியடிகள் 158  வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அன்னாரது உருவச்சிலைக்கு  கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், பொருளாளர் சுபேதார் .கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லய்யா, மோகன், கோவில்பட்டி பசுமை தூய்மை இயக்கம் தலைவர் ரவி மணிக்கம், இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஜெயா சனார்த்தனன், ராமலட்சுமி, மணிமேகலை, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிகுமார், INTUC ராஜசேகர், மகேந்திரன், […]

செய்திகள்

வெற்றிப் பயண திட்டம் தொடக்கம் : முதல் அமைச்சர் விஜய், பெண்களுக்கு இலவச

தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா விடியல் பயண திட்டத்தை கடந்த தி.மு.க. அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி, மாநகர மற்றும் நகர்ப்புற சாதாரண அரசு பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலின்போது த.வெ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், த.வெ.க. ஆட்சி அமையும்போது மகளிர் பயணத்திட்டம் அனைத்து அரசு பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ந்தேதி […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மகளிருக்கான வெற்றி பயணம் திட்டத்தை  ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டம், ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில், விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று (2.10.2026)  தொடக்கி வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், கலந்து கொண்டு பேருந்து சேவையினை துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பேசியதாவது:-‘ இன்றைய தினம்  முதலமைச்சரால்  வெற்றி பயணம் திட்டம் சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 83 […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் காந்தி ஜெயந்தி -இலவச கண் சிகிச்சை முகாம் 

 கோவில்பட்டி வட்டார காங்கிரஸ் கமிட்டி  மற்றும் டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து காந்தி ஜெயந்தி விழா மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின.  கோவில்பட்டி அத்தைகொண்டான் பகுதி கோமதி நகரில் நடந்த நிகழ்ச்சியில் காந்தி உருவப்படத்திற்கு மணல் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி  கலந்து கொண்டு மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார். முகாம் ஏற்பாடுகளை […]

கோவில்பட்டி

தாராபுரம் தொகுதி இடைதேர்தல் பிரசாரம்: கோவில்பட்டி நாம் தமிழர் கட்சியினர் இன்று பயணம்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 6 ந் தேதி நடக்கிறது. இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக  மு. கார்த்திகா போட்டியிடுகிறார். இவரது வெற்றிக்கு பணிசெய்ய கட்சியின் தலமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அறிவுத்தலின்படி  தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருதூர் ஊராட்சி பகுதியில் வாக்கு சேகரிக்க இருக்கிறார்கள். இதற்காக இன்று 2.10.26  வெள்ளிக்கிழமை மாலை கோவில்பட்டியில் இருந்து தாராபுரத்திற்கு செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது ..எனவே […]

கோவில்பட்டி

கோவில்பட்டி  ரெயில்நிலைய  மேம்பாட்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்; கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில்

 கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமையிலான குழுவினர் கோவில்பட்டி ரெயில் நிலைய மேலாளரை சந்தித்து ஒரு மனு அளித்தனர் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- *கோவில்பட்டி ரெயில் நிலையம் புதுப்பிப்பு பணிகளை  துரிதப்படுத்த வேண்டும். *இரண்டாவது நடைமேடையில் பயணிகளின் பாதுகாப்பிற்கு  முழுமையான மேற்கூரை அமைத்து தரவேண்டும்.  *மின்விளக்கு, மின்விசிறி, கூடுதல் […]

கோவில்பட்டி

முதியோர் தினம் : கல்லூரி மாணவ, மாணவிகள் மரக்கன்றுகள் நட்டனர் 

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) யில் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிநடைபெற்றது. கல்லூரியின் ஆங்கிலத்துறையின் லிங்குவாகாலிக் மொழி மேம்பாட்டு அமைப்பு சார்பில்,  நடந்த நிகழ்விற்கு கல்லூரியின் செயலாளர்  மகேந்திரன், வேதியியல் துறைத் தலைவரும், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியுமான  பா. உமாதேவி மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர் ரா. சரவண செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.  வேதியல் துறை தலைவர் பா. உமாதேவி […]

கோவில்பட்டி

த.வெ.க. சார்பில், காய்ச்சலை தடுக்கும் கசாயம் விநியோகம்

டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட பல்வேறு வகையான காய்ச்சல்கள் அதிகமாக பரவி வரும் சூழலில், இதுபோன்ற காய்ச்சல்கள் பரவுவதை தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கிலும் தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கசாயம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, த.வெ.க., தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஏற்பாட்டில், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம்,, இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம், அரசு ஆஸ்பத்திரி, தெற்கு திட்டங்குளம் பஸ் நிறுத்தம்,, […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா

கோவில்பட்டியில் நடிகர் சிவாஜி கணேசனின் 98 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மன்றம் மற்றும் இளைய திலகம் பிரபு மன்றம் சார்பில், கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு தேவர் சிலை அருகே நடந்த நிகழ்ச்சிக்கு சிவாஜி மன்ற தலைவர் சுப்புராயலு தலைமை தாங்கினார். மன்ற துணைத் தலைவர்  சின்னகொம்பையா, பிரபு மன்ற தலைவர் ஆறுமுகபாண்டி, செல்வராஜ், வேலுச்சாமி, ராஜசேகரன், தர்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட […]