கோவில்பட்டி ரெயில்நிலைய மேம்பாட்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்; கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மனு
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமையிலான குழுவினர் கோவில்பட்டி ரெயில் நிலைய மேலாளரை சந்தித்து ஒரு மனு அளித்தனர் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

*கோவில்பட்டி ரெயில் நிலையம் புதுப்பிப்பு பணிகளை
துரிதப்படுத்த வேண்டும்.
*இரண்டாவது நடைமேடையில் பயணிகளின் பாதுகாப்பிற்கு
முழுமையான மேற்கூரை அமைத்து தரவேண்டும்.
*மின்விளக்கு, மின்விசிறி, கூடுதல் இருக்கைகள், கழிப்பறை
வசதி செய்து தரவேண்டும்.
*பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடுதல் ரெயில்வே காவலர்களை (Railway Police Force) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
*ரெயில்வே நிலையம் நுழைவு வாயில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் CCTV கேமரா பொருத்த வேண்டும்.
*கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் குறைந்தபட்சம் 5 போர்ட்டர்கள் பணிபுரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்.
*கொரோனா காலத்தில் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும்.

*ரெயில் நிலையத்தில் அமைந்திருக்கும் இருசக்கர வாகன காப்பகத்திற்கு தரைத்தளம் போட்டு மேற்கூரை அமைத்து
வாகனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ரெயில் நிலைய மேலாளர் சந்திப்பின்போது கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசனு டன் இந்திய கலாச்சார நட்புறவு கழக மாநில துணைத்தலைவர் அபிராமி முருகன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லய்யா,மோகன், தவம் பாலாஜி, ஞானம், இந்திய தேசிய காங்கிரஸ் துரைராஜ், திராவிடர் கழகம் செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
🔹







