கோவில்பட்டியில் காந்தி ஜெயந்தி -இலவச கண் சிகிச்சை முகாம்

கோவில்பட்டி வட்டார காங்கிரஸ் கமிட்டி மற்றும் டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து காந்தி ஜெயந்தி விழா மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின.
கோவில்பட்டி அத்தைகொண்டான் பகுதி கோமதி நகரில் நடந்த நிகழ்ச்சியில் காந்தி உருவப்படத்திற்கு மணல் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி கலந்து கொண்டு மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார்.

முகாம் ஏற்பாடுகளை கோவில்பட்டி வட்டார காங்கிரஸ் தலைவர் ரமேஷ் மூர்த்தி மற்றும் நகரத் தலைவர் அருண்பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.
முதன்மை முகாம் மேலாளர் ஆசைமாணிக்கம், மருத்துவர் விழி ஆய்வாளர் சிஞ்சு,முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜாராம்,முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளர் வேணுகோபால், வழக்கறிஞர் கருப்பசாமி,ஐஎன்டியுசி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், மாவட்டசெயலாளர் துரைராஜ், மாவட்டத் துணைத் தலைவர் செல்லத்துரை,கழுகுமலை சங்கர்,
இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜான் பிரிட்டோ,தங்கபாண்டி,தொகுதி தலைவர் ராமச்சந்திரன், பிரபாகரன்,தர்மர் பேரையா,முத்து விஜயா,கிருபாகரன், முத்துகுமாரவேல்,சண்முகவேல் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்







