காந்தி ஜெயந்தி: கோவில்பட்டியில் ஆட்டோ பேரணி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பட்டியில் மகாத்மா காந்தி ரத்ததான அறக்கட்டளை சார்பில் ஆட்டோ பேரணி நடைபெற்றது.
கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பிருந்து புறப்பட்ட பேரணியை தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒலிம்பிக் தீபத்தை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் சீனிவாசன், ஏற்றி வைத்தார். கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் (பொ) ஆர் எஸ் ரமேஷ் மகாத்மா காந்தி ரத்ததான கழக அறக்கட்டளை கொடியை ஏற்றி வைத்தார்.

பேரணியில் ரத்ததான கழக உறுப்பினர்கள், பள்ளி மாணவர், மாணவிகள் ரத்ததானத்தின் அவசியம் குறித்த பதாகைகளை கையில் ஏந்திய படி சென்றனர். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்தி மண்டபத்தில் நிறைவடைந்தது.
பின்னர், காந்தி மண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பேரணியில், பள்ளி சிலம்பம் மாணவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் அருண் பாண்டியன், ஐ என் டி யூ சி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராஜசேகர், மதிமுக நிர்வாகிகள் முத்துப்பாண்டி, வனராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரணி ஏற்பாடுகளை மகாத்மா காந்தி ரத்ததான அறக்கட்டளை நிறுவனத் தலைவர் தாஸ் செய்திருந்தார்.
கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி ஆங்கிலத்துறையின் லிங்குவாகாலிக் மொழி மேம்பாட்டு அமைப்பு சார்பில், காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது.
மகாத்மா காந்தியின் உண்மை, அகிம்சை, எளிமை, சமூகப் பொறுப்பு மற்றும் இன்றைய தலைமுறைக்கு காந்திய சிந்தனைகளின் அவசியம் குறித்து மாணவர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் மகேந்திரன், வேதியியல் துறை தலைவரும், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி மl பா. உமாதேவி மற்றும் ஆங்கில துறைத் தலைவர் ரா. சரவண செல்வகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆங்கிலத் துறைத் தலைவர் ரா. சரவண செல்வகுமார் மற்றும் ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர்கள் வித்யாலட்சுமி, தேன்மொழி ஆகியோர் செய்திருந்தனர்.







