முதியோர் தினம் : கல்லூரி மாணவ, மாணவிகள் மரக்கன்றுகள் நட்டனர்
Oplus_16908288
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) யில் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
நடைபெற்றது.
கல்லூரியின் ஆங்கிலத்துறையின் லிங்குவாகாலிக் மொழி மேம்பாட்டு அமைப்பு சார்பில், நடந்த நிகழ்விற்கு கல்லூரியின் செயலாளர் மகேந்திரன், வேதியியல் துறைத் தலைவரும், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியுமான பா. உமாதேவி மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர் ரா. சரவண செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.
வேதியல் துறை தலைவர் பா. உமாதேவி பேசுகையில் முதியோர்களின் அனுபவம், அறிவு மற்றும் சமூகப் பங்களிப்பை போற்றுவதோடு, மாணவர்களிடையே முதியோர்களுக்கு மரியாதை செலுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆங்கிலத் துறைத் தலைவர் மற்றும் உதவி பேராசியர் ரா. சரவண செல்வகுமார் மற்றும் ஆங்கிலத் துறை உதவிப் பேராசியர்கள் வித்யாலட்சுமி, தேன்மொழி ஆகியோர் செய்திருந்தனர்.







