கோவில்பட்டியில் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவிப்பு
அண்ணல் காந்தியடிகள் 158 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அன்னாரது உருவச்சிலைக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், பொருளாளர் சுபேதார் .கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லய்யா, மோகன், கோவில்பட்டி பசுமை தூய்மை இயக்கம் தலைவர் ரவி மணிக்கம், இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஜெயா சனார்த்தனன், ராமலட்சுமி, மணிமேகலை,
நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிகுமார், INTUC ராஜசேகர், மகேந்திரன், திராவிடர் கழகம் செண்பகராஜ், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகன்,இரட்டைமலை சீனிவாசனார் இயக்க செல்வகுமார், திருக்குறள் ராஜாராம், ஆவல்நத்தம் லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.







