த.வெ.க. சார்பில், காய்ச்சலை தடுக்கும் கசாயம் விநியோகம்
டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட பல்வேறு வகையான காய்ச்சல்கள் அதிகமாக பரவி வரும் சூழலில், இதுபோன்ற காய்ச்சல்கள் பரவுவதை தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கிலும் தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கசாயம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, த.வெ.க., தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஏற்பாட்டில், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம்,, இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம், அரசு ஆஸ்பத்திரி, தெற்கு திட்டங்குளம் பஸ் நிறுத்தம்,, நாடார் மேல்நிலைப்பள்ளி, புதுரோடு முச்சந்தி விநாயகர் கோயில், மந்தித்தோப்பு ரோடு சந்திப்பு மங்கள விநாயகர் கோயில், கதிரேசன் கோயில் ரோட்டில் உள்ள மேட்டுக்காளியம்மன் கோயில் அருகே ஆகிய இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக கசாயம் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே நடந்த கசாயம் வழங்கும் நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் பாலமுருகன், இ.பி., ரமேஷ், ஆதிரா ரமேஷ், கூடலிங்கம், கொம்பையா, கார்த்திகேயன், சூர்யா, சங்கர், முத்துராமலிங்கம் கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.







