கோவில்பட்டியில் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா
கோவில்பட்டியில் நடிகர் சிவாஜி கணேசனின் 98 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மன்றம் மற்றும் இளைய திலகம் பிரபு மன்றம் சார்பில், கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு தேவர் சிலை அருகே நடந்த நிகழ்ச்சிக்கு சிவாஜி மன்ற தலைவர் சுப்புராயலு தலைமை தாங்கினார். மன்ற துணைத் தலைவர் சின்னகொம்பையா, பிரபு மன்ற தலைவர் ஆறுமுகபாண்டி, செல்வராஜ், வேலுச்சாமி, ராஜசேகரன், தர்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் காமராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி கனி , தமிழக வெற்றிக் கழக நகர கிழக்கு செயலாளர் செந்தில்குமார், நல்லாசிரியர் ராஜாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, சிவாஜி கணேசன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது,.







