போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை: சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டி.ஐ.ஜி பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், 4.425 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது,.
கஞ்சா வேட்டையில் சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளர். ஐ. முத்துராஜா, தலைமைக் காவலர். தா. ஜான் அந்தோணி ராஜ், முதல் நிலைக் காவலர்கள். ஜே. ஜோசப்,. ப. தினேஷ்குமார் மற்றும் காவலர். ரா. சக்தி ராஜேந்திரன் ஆகியோர் [பாராட்டப்பட்டனர்

இன்று (1.10.2026) திருநெல்வேலி சரக போலீஸ் டி.ஐ.ஜி, இரா. திருநாவுக்கரசு, சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, அவர்களின் சிறப்பான பணியைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.







