தாராபுரம் தொகுதி இடைதேர்தல் பிரசாரம்: கோவில்பட்டி நாம் தமிழர் கட்சியினர் இன்று பயணம்
தாராபுரம் , மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 6 ந் தேதி நடக்கிறது. இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மு. கார்த்திகா போட்டியிடுகிறார். இவரது வெற்றிக்கு பணிசெய்ய கட்சியின் தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுத்தலின்படி தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருதூர் ஊராட்சி பகுதியில் வாக்கு சேகரிக்க இருக்கிறார்கள்.

இதற்காக இன்று 2.10.26 வெள்ளிக்கிழமை மாலை கோவில்பட்டியில் இருந்து தாராபுரத்திற்கு செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது ..எனவே பிரசாரத்திற்கு வர தயாராக இருக்கும் கட்சி தொண்டர்கள் தங்கள் பெயரை 9443446432 என்ற அலைபேசி நம்பருக்கு தொடர்பு கொண்டு பதிவு..செய்யுமாறு மாநில உழவர் பாசறை செயலாளர் மருதம் மாரியப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்
இதே போல் ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து நாம் தமிழர் கட்சியினர் தாராபுரம் செல்கிறார்கள். மேலும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமனை ஆதரித்தும் நாம் தமிழர் கட்சியினர் வெளியூர்களில் இருந்து பயணம் ஆகிறார்கள்.







