கோவில்பட்டி. கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி மகளிர்க்கழகம் மற்றும் இளைஞர் நலச் சங்கம் இணைந்து கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் மற்றும் முதல்வர் அ.பாண்டியராணி ஆகியோர் வழிகாட்டுதலின்படி “மாணவர்களுக்கான இணைய பாதுகாப்பு: பிரச்சினைகள். தடுக்கும் வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இயற்பியல் துறைத்தலைவரும் மகளிர்க்கழக ஒருங்கிணைப்பாளருமான பெ.சித்ரலேகா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவில்பட்டி, அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பத்மாவதி, இணைய வழி குற்றங்கள், சட்டங்கள் […]
தமிழ் சினிமாவில் 80-களில் பல வெற்றிப் படங்களில் நடித்து குடும்ப ரசிகர்களை கவர்ந்தவர்கள் நடிகை அம்பிகா மற்றும் ராதா சகோதரிகள். இவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் ரூ. 46 கோடி அளவில் காசோலை மோசடி நடைபெற்றதாக தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் குஞ்சன் நாயர் மீது மீது, நடிகை ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் […]
கோவில்பட்டியை அடுத்த பழைய அப்பனேரி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் நலனுக்காக 23-ந் தேதி புதன்கிழமை ஆதார் சிறப்பு முகாம் நடத்தபப்டுகிறது. இந்திய அஞ்சல்துறை, கோவில்பட்டி தலைமை அஞ்சலகம் மூலமாக அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளின் உத்தரவின்பேரில் இந்த முகாம் நடைபெறுகிறது. பழைய அப்பனேரி சமுதாய நலக்கூடத்தில் 23-:9.-2026 புதன் கிழமை காலை 9: 30 மணி முதல் மாலை 3.30 மணிவரை முகாம் நடக்கிறது, இந்த முகாமில் பெயர் திருத்தம், முகவரிமாற்றம், மொபைல் எண் சேர்த்தல் […]
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுவதாக முதல்-அமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் த.வெ.க. அரசின் தன்னிச்சையான முடிவு கடும் கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் திமுகவின் ஆதரவைக் கோரி, மீனவச் சங்கத்தினர் இன்று என்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர். இதற்கு எதிராக மீனவ மக்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு திமுக முழு ஆதரவைத் தருவதோடு, தனது முடிவில் இருந்து த.வெ.க. அரசு பின்வாங்கும் வரை மீனவச் சகோதரர்களுடன் உறுதியாகத் […]
சென்னையை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த 6.10.2025 அன்று விபசார தடுப்பு பிரிவு போலீசில் ஒரு புகாரை தெரிவித்தார். அதில், “அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்னுடைய அலுவலகத்துக்கு வந்தார். அவர் ‘பென்டிரைவ்’ ஒன்றை கொடுத்தார். அதில் பிரபல தொழில் அதிபரான ‘ஜெம் கிரானைட்ஸ்’ உரிமையாளர் வீரமணி (வயது 84) சிறுமியிடம் பாலியல் உறவில் ஈடுபட்ட ‘வீடியோ’ காட்சிகள் இருப்பதாக கூறிச் சென்றார்” என்ற தகவலை தெரிவித்தார். அந்த ‘பென்டிரைவ்’வில் இருந்த வீடியோ காட்சியை விபசார தடுப்பு […]
கோவில்பட்டி பாரதி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சிவசக்தி. இத்தம்பதியின் 3 வயது பெண் குழந்தை ருத்ரா வைஷ்ணவி. கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் பணிபுரிந்து வரும் மாரியப்பன், கடந்த செப்டம்பர் 14-ம் தேதி சொந்த ஊரான கோவில்பட்டிக்கு வந்தார். அன்று மதியம் மாரியப்பன் தனது மகள் ருத்ரா வைஷ்ணவியை கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வீட்டிற்குத் திரும்பிய சிறுமி தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். இதுபற்றி , தாய் சிவசக்தி விசாரித்ததற்கு, தந்தை […]
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் மாவட்ட கழக அலுவலகத்தில் நசைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார்.மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன்,நகர செயலாளர் நேதாஜி பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கட்சியின் 22ம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கபட்டது. மேலும் தலைமை கழகம் கேப்டன் ஆலையத்தில் தினம்தோறும் நடைபெறும் அன்னதானத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் வரும் அக்டோபர் மாதம் 25 மற்றும் […]
தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் 5 முனை போட்டி நிலவுகிறது. இரண்டு தொகுதிகளுக்கான ஏற்பாடு தகவல் கடந்த 9 ம் தேதி தொடங்கி 16ஆம் தேதி முடிவடைந்தது. பின்னர் வேற்பு மனுக்கள் பரிசீலனை, வாபஸ் பெறுதல் முடிந்து இன்று வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. […]
தூத்துக்குடி மாவட்டம்புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம் வருடம் 8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த மாரியப்பன் (வயது 55/26) என்பவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மேற்படி நீதிமன்ற நீதிபதி முருகன் இன்று (18.9.2026) மாரியப்பனை […]
கோவில்பட்டி அருகே கயத்தாறு மெயின் ரோடு பகுதியில் வசித்து வரும் விஜயமுத்துப்பாண்டி என்பவரது மனைவி சிவகாமி (வயது 64) என்பவர், கடந்த 17.9.2026 அன்று தனது வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு போனதாக கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில், சிவகாமி என்பவரது வீட்டில் தங்க நகைகள் […]







