தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்; கோவில்பட்டியில் நடந்தது
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் மாவட்ட கழக அலுவலகத்தில் நசைபெற்றது.
வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார்.மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன்,நகர செயலாளர் நேதாஜி பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கட்சியின் 22ம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கபட்டது. மேலும் தலைமை கழகம் கேப்டன் ஆலையத்தில் தினம்தோறும் நடைபெறும் அன்னதானத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் வரும் அக்டோபர் மாதம் 25 மற்றும் 26ஆகிய தேதியில் அன்னதானம் செய்ய தீர்மானிக்கபட்டது.
வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து நகர ஒன்றியங்களிலும் வெற்றி வாய்ப்புள்ள வார்டு மற்றும் வேட்பாளர்களை தயார் செய்துகொடுக்க தீர்மானிக்கபட்டது.

கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன்,மலைராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் காளிதாஸ், முத்துசெல்வம், சத்தியமூர்த்தி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியசெயலாளர் தங்கச்சாமி,கயத்தார் கிழக்கு ஒன்றியசெயலாளர் அருண்,மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ராமசாமிபாண்டியன், புதூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சிவமுருகன், மேற்கு ஒன்றியம் மணிகண்டண்,
கோவில்பட்டி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முருகன், கயத்தார் நகர செயலாளர் இசக்கிகண்ணண், மாவட்ட மகளிரணி செயலாளர் வெண்ணிலா, துணை செயலாளர் சந்தனமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்







