• November 11, 2026

தூத்துக்குடி வ உ சி கல்லூரி பவள விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி சி. பி. ராதா கிருஷ்ணன்; தன்னுடன் படித்த நண்பர்களுடன் கலந்துரையாடினார்

 தூத்துக்குடி வ உ சி கல்லூரி பவள விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி சி. பி. ராதா கிருஷ்ணன்; தன்னுடன் படித்த நண்பர்களுடன் கலந்துரையாடினார்

தூத்துக்குடியில்  வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழாவில் ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். மேலும் கல்லூரியில் தன்னுடன் படித்த நண்பர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சிலைக்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கல்லூரியின் 75-ஆம் ஆண்டு பவள விழாவைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு வளைவைத் திறந்து வைத்தார். பின்னர், தாம் பயின்ற பழைய வகுப்பறைக்குச் சென்று, தனது கல்லூரிப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். 

1975–78 ஆம் ஆண்டு தன்னுடன் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பிலும் பங்கேற்ற அவர், தனது வகுப்புத் தோழர்களுடன் கலந்துரையாடி, பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

 கல்லூரி பவள விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

இந்த கல்லூரியில் நான் படித்த காலத்தில் எங்களைச் செதுக்கி உருவாக்கிய பெருமை எங்களது ஆசிரியப் பெருமக்களையே சாரும். கம்யூனிசத்திற்கும் சோஷலிசத்திற்கும் கேபிடலிசத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை எங்களுடைய பேராசிரியர் எடுத்துரைத்த விதம் இன்றைக்கும் என் உள்ளத்தைவிட்டு அகலாது.

 தேவைக்கேற்ற உற்பத்தி என்பதைவிட, இயற்கை வளங்களை எப்படி வேண்டுமானாலும் சுரண்ட வேண்டும் என்கின்ற உணர்வுதான் இன்று உலகம் முழுவதும் இருக்கிறது. அதுதான் கேபிடலிசத்தின் மிகப்பெரிய எதிர்மறையான அம்சம் என்று அவர்கள் அன்றைக்குக் குறிப்பிட்டது இன்றைக்கும் எனக்கு நினைவிருக்கிறது.

இந்தக் கல்லூரியில் கற்றுக்கொண்டதுதான் என்னை இன்றைக்கு இந்திய தேசத்தின் குடியரசுத் துணைத் தலைவராக வழிநடத்துகிறது.

நான் இங்கே எதையெல்லாம் கற்றேனோ, எதையெல்லாம் பார்த்து, அவற்றை என்னுடையதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேனோ, அந்த ஆளுமைகள்தான் இன்றைக்கு என்னைக் குடியரசுத் துணைத் தலைவராக உயர்த்தியிருக்கின்றன.

 இன்றைக்கு இங்கே இருக்கின்ற இளைய மாணவப் பெருமக்களிடம் நான் முன்வைக்க விரும்பும் ஒரே பணிவான வேண்டுகோள்.

அருமைச் சகோதரர்களே!

வாழ்க்கையைச் சீரழிக்கக்கூடிய விஷயங்களிலிருந்து நாம் கவனமாக விலகியிருக்க வேண்டும். குறிப்பாக, போதைப் பழக்கங்கள் இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்று என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஒருவன் தனது இளம் வயதிலேயே தீய செயல்களையும் தீய பழக்கவழக்கங்களையும் தன்னை அண்டவிடாமல் தடுத்து நிறுத்துகின்றவல்லமையைப் பெற்றிருக்கிறானோ, அவனால் மட்டும்தான் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தைத் தொட முடியும்; பெரிய சிகரங்களை எட்ட முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

 இவ்வாறு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேசினார்

இந்நிகழ்ச்சியில்  தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், வ.உ.சி. கல்லூரியின் செயலாளர் சொக்கலிங்கம், முதல்வர் டாக்டர் சி. வீரபாகு, முன்னாள் மாணவர் தலைவர் ஏ.வி. முருகேசன், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *