கயத்தாறில் வீடு புகுந்து நகை, பணம் திருடியவர் கைது
Oplus_16908288
கோவில்பட்டி அருகே கயத்தாறு மெயின் ரோடு பகுதியில் வசித்து வரும் விஜயமுத்துப்பாண்டி என்பவரது மனைவி சிவகாமி (வயது 64) என்பவர், கடந்த 17.9.2026 அன்று தனது வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு போனதாக கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில், சிவகாமி என்பவரது வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியது கயத்தாறு வடக்கு தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் சிவகுமார் (28) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து கயத்தாறு போலீசார் மேற்படி சிவகுமாரை கைது செய்து, அவரிடமிருந்து 5 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2,10,000/- ரொக்கப் பணம் ஆகியவற்றை மீட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக கயத்தாறு காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







