போக்சோ வழக்கில் கைதானவருக்கு 20 வருடம் சிறை தண்டனை
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்டம்
புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம் வருடம் 8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த மாரியப்பன் (வயது 55/26) என்பவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மேற்படி நீதிமன்ற நீதிபதி முருகன் இன்று (18.9.2026) மாரியப்பனை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 20 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து 3 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.







