கல்லூரி மாணவர்களுக்கான இணைய பாதுகாப்பு, பிரச்சினைகளை தடுக்கும் வழிமுறைகள் விழிப்புணர்வு
Oplus_16908288
கோவில்பட்டி. கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி மகளிர்க்கழகம் மற்றும் இளைஞர் நலச் சங்கம் இணைந்து கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் மற்றும் முதல்வர் அ.பாண்டியராணி ஆகியோர் வழிகாட்டுதலின்படி “மாணவர்களுக்கான இணைய பாதுகாப்பு: பிரச்சினைகள். தடுக்கும் வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இயற்பியல் துறைத்தலைவரும் மகளிர்க்கழக ஒருங்கிணைப்பாளருமான பெ.சித்ரலேகா வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவில்பட்டி, அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பத்மாவதி, இணைய வழி குற்றங்கள், சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் சுமார் 300 மாணவ, மாணவிகள் பல்வேறு துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்த்துறைத்தலைவர் மா.சங்கரேஸ்வரி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர்க்கழக ஒருங்கிணைப்பாளரும் இயற்பியல் துறைத்தலைவருமான பெ.சித்ரலேகா, இளைஞர் நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் மா.சங்கரேஸ்வரி, இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் தேவதர்ஷினி, ஆய்வக உதவியாளர் மகாலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.







