கோவில்பட்டியில் விளையாட்டு காயம் விழிப்புணர்வு, பாதம்-கணுக்கால் சிகிச்சை கருத்தரங்கம்; பிரபல டாக்டர்கள் பங்கேற்பு
Oplus_16908288



கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் 19-ந்தேதி சனிக்கிழமை மாலை ‘நெல்லை ஆர்த்தோ கிளப்’ சார்பில் விளயாட்டு காயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, வலிமைப் பயிற்சிகள் காயங்களை தடுக்கும் வழிகள் மற்றும் விளையாட்டு காயங்களைத் தடுக்கும் திட்டம், வலிமைக்கான பயிற்சி செயல்திறன் மற்றும் காயங்களைத் தடுத்தல் ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற்றது,,
டாக்டர்கள் எஸ்.ஆர்.சுந்தரராஜன் (தலைவர் – IAS, TNGA) எஸ். மாரிமுத்து, (செயலாளர் -TNOA), எஸ்.மகேஷ்ராம் (பொருளாளர் – IAS, TNOA) என்,.மணிகண்டன் (முன்னாள் தலைவர் – TNOA) ஆர்,.சுந்தரபாண்டியன் (செயற்குழு உறுப்பினர் – IOA) எஸ்.. தாமோதரன் (செயற்குழு உறுப்பினர்) ஏ. சுரேஷ் குமார் (தலைவர் – NOC) எஸ் தினேஷ் (செயலாளர் NOC) ஜெ நிர்மல்ராஜா (பொருளாளர்- NOC) ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
மேலும் ராஜேஷ் (பிசியோதெரபிஸ்ட்) பாக்யஸ்ரீ சாவர்ட் உடற்பயிற்சி ஆர்வலர் ஆகியோர் கலந்து கொண்டனர்,. சுமார் 400 விளையாட்டு ஆர்வலர்கள் கலந்துகொண்டனர் இவர்கள் அனைவரும் கலந்துரையாடலில் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்

கோவில்பட்டி நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் உள்ள சில்வர்ஸ்டோன் ரிசார்ட்ஸ் ஓட்டலில் பாதம் மற்றும் கணுக்கால் மருத்துவ கல்வியை தொடருதல் மற்றும் கருத்தரங்கம் 20-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது, காலை முதல் மாலை வரை நடந்த கருத்தரங்கத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பிரபல டாக்டர்கள் கலந்து கொண்டனர், .பாதம் மற்றும் கணுக்கால் சிகிச்சை முறைகள் பற்றி பல்வேறு தலைப்புகளில் மருத்துவ நிபுணர்கள் சிறப்புரை ஆற்றினர்,.. `”பாதம் மற்றும் கணுக்கால்’ சிகிச்சையில் எனது பயணம்” என்ற தலைப்பில் டாக்டர் எஸ்.ஆர்.சுந்தரராஜன் (தலைவர் TNOA) சிறப்புரை ஆற்றினார்,
பிரபல மருத்துவ நிபுணர்கள் டாக்டர்கள். ஜே. தர்மராஜன், (பார்வதி மருத்துவமனை, சென்னை) டி.வி.ராஜா (விசா மருத்துவம், சென்னை) ஜே. பார்த்திபன் (ஸ்ரீ மருத்துவமனை, சென்னை). ஜோனி மாண்டிஸ்(HOD, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி), ஆர். ரமாகாந்த், அருண் கமல்,(கங்கா மருத்துவமனை, கோயம்புத்தூர்) கலந்து கொண்டனர், பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்,.
பாதம் மற்றும் கணுக்கால் எலும்பு முறிவு பற்றி குவாட்ரிமாலியோலர் எலும்பு முறிவு கோட்பாடுகள் – 360 டிகிரி நிலைப்படுத்துதல் என்ற தலைப்பில் டாக்டர் ஜே. தர்மராஜன் பேசினார்,.

பைலான் எலும்பு முறிவு – குறிப்பிட்ட தூண் சார்ந்த நிலைப்படுத்துதல் தலைப்பில் டாக்டர் அருண் கமல், கல்கேனியம் (குதிகால் எலும்பு) முறிவு – (குறைந்தபட்ச ஊடுருவல் முறை vs விரிவான பக்கவாட்டு முறை) மருத்துவ விளைவுகள் தலைப்பில் டாக்டர் டி.வி. ராஜா, கவனிக்கப்படாத கல்கேனியல் (குதிகால் எலும்பு) முறிவுகள் தலைப்பில் டாக்டர் எஸ்.ஆர். சுந்தரராஜன் ஆகியோர் பேசினார்கள்,..
மேலும் : லிஸ்ஃப்ராங்க்) காயம் – நிலைப்படுத்துதலா அல்லது இணைத்தலா? என்ற த தலைப்பில் ? டாக்டர் ஜே. பார்த்திபன், டாலஸ் மற்றும் பெரிடாலர் எலும்பு முறிவு மற்றும் இடப்பெயர்ச்சி தலைப்பில் டாக்டர் கிருபாகரன்
: அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கதிரியக்க மதிப்பீடு மற்றும் சரிபார்ப்பு தலைப்பில் டாக்டர் ஜே. தர்மராஜன் நியூரோபதி (நரம்பு பாதிப்பு) சார்ந்த கணுக்கால் எலும்பு முறிவு பற்றி டாக்டர் ஆர். ராமகாந்த் பக்கவாட்டு கணுக்கால் உறுதியற்ற தன்மை – தற்போதைய கோட்பாடுகள் பற்றி டாக்டர் எஸ்.ஆர். சுந்தரராஜன்,: சிண்டெஸ்மோடிக் காயம் – நெகிழ்வுத்தன்மை கொண்ட vs உறுதியான நிலைப்படுத்துதல் பற்றி டாக்டர் ஜெ. தர்மராஜன் ஆகியோர் பேசினார்கள்.
இதே போல் சார்கோட் பாதம் மற்றும் கணுக்கால் ) – தீவிர பாதிப்பைத் தடுத்தல் பற்றி டாக்டர் டி.வி. ராஜா: PCFD – தற்போதைய மருத்துவக் கண்ணோட்டங்கள் பற்றி டாக்டர் ஆர். ராமகாந்த் : பாதம் மற்றும் கணுக்கால் அறுவை சிகிச்சையில் MIS-ன் பங்கு பற்றி டாக்டர் ஜெ. தர்மராஜன் : TA தசைநார் இணைப்புப் பகுதி பாதிப்பு (பற்றி டாக்டர் ஜெ. பார்த்திபன் பாதம் மற்றும் கணுக்கால் சார்ந்த ஆஸ்டியோடோமி (எலும்பு வெட்டு) சிகிச்சைகள் பற்றி டாக்டர் டி.வி. ராஜா :கணுக்கால் ஆர்த்ரோஸ்கோபி: அடைப்பு) சிகிச்சை முதல் ஆர்த்ரோஸ்கோபிக் இணைவு ) வரை என்ற தலைப்பில் டாக்டர் ஜோனி மண்டிஸ் பேசினார்கள்,.
=மருத்துவ நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட கலந்துரையாடலில் = அனைத்து நிபுணர்களும் பங்கேற்றனர். இறுதியில் நடந்த பயிற்சி அரங்கத்தில் iடாக்டர்கள் எஸ்.ஆர்.சுந்தரராஜன்,.எஸ்.மாரிமுத்து ஆர்.சுந்தரபாண்டியன், என்.மணிகண்டன், எஸ்.தினேஷ், ஏ. சுரேஷ் குமார், எஸ்.மகேஷ்ராம்.. டாக்டர் எஸ்.தாமோதரன் , ஜே நிர்மல்ராஜாஆகியோர் கலந்து கொண்டனர்,ள்.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து வருகை தந்திருந்த பல மூத்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்,.







