கோவில்பட்டியில் நாளைய மின் தடை ஒத்திவைப்பு
கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 7 துணை மின் நிலையங்களில் செப்டம்பர் மாத பராமரிப்புக்காக நாளை 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, 7 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று கோட்ட மின் பொறியாளர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாளைய மின் தடையானது நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், இன்னொரு நாளில் மின்தடை செய்யப்படும் என்று 21 ம் தேதி மாலை கோவில்பட்டி கோட்ட மின் பொறியாளர் அறிவித்துள்ளார்.







