“போதை இல்லா இளைஞர்களால் வளர்ச்சியடைந்த பாரதம்” சிறப்பு நிகழ்ச்சி
Oplus_16908288
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் இளைஞர் நலத்துறை, இளம் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண் 180 இணைந்து “விக்சித் பாரத் யுவா கனெக்ட் போதை இல்லா இளைஞர்களால் வளர்ச்சியடைந்த பாரதம்” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி தொடக்க விழாவுக்கு கல்லூரியின் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா. மகேஷ்குமார் தலைமை தாங்கி, வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட மை பாரத் கேந்திராவின் மாவட்ட இளைஞர் அதிகாரி ஜி.மது மிதா கலந்து கொண்டு, போதை பொருள் இல்லா பாரதத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு குறித்து சிறப்புரையாற்றினார்.

மை பாரத் கேந்திராவின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆ.மாரிமுத்து மற்றும் மை பாரத் கேந்திராவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரை ஆற்றினார்.. ஆங்கிலத்துறை மாணவி ஜீவா நந்தினி வரவேற்று பேசினார்.வழங்கினார். சக்தி பிரியா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். 400-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மற்றும் இளம் செஞ்சிலுவை சங்க மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். வணிகவியல் துறை (தொழில்நெறிகணக்கியல் ) மாணவி ஆ.கலைவாணி நன்றி கூறினார்.







