பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்


தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலை மேம்படுத்திடவும், மாணவ, மாணவியர்கள் பசியின்றிப் பள்ளி பயில்வதை உறுதிசெய்கிடவம் கல்வியில் கவனம் செலுத்திடவும், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கும் காலை உணவு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி முதலமைச்சர் விஜய் இன்று பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் ஏற்கனவே 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 199 மாணவ, மாணவியர் பயன்பெற்றுவந்த நிலையில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 127 மாணவ, மாணவியர் கூடுதலாகப் பயன்பெறுவர்.

இப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். மேலும் அவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார்.
நிகழச்சியில் அமைச்சர் கள் . ந. ஆனந்த்,. ஆதவ் அர்ஜுனா,. ராஜ்மோகன், கு. ஜெகதீஸ்வரி, மாண்புமிகு. குமார், சட்டமன்ற உறுப்பினர் கே.வி. விஜய் தாமு, தலைமைச் செயலாளர் மு. சாய்குமார்,., நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் . ககன்தீப் சிங் பேடி,., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ம. பல்லவி பல்தேவ், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர். ஜி.எஸ். சமீரன்இணை ஆணையர் (கல்வி) க. கற்பகம், , சமூக நலத்துறை இயக்குநர் டாக்டர் இரா. பிருந்தா தேவி, பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் அஃப்தாப் ரசூல், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம், தமிழ்நாடு முழுவதும் கூடுதலாக 7,537 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வரை பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ. மாணவியர்
கூடுதலாகப் பயன்பெறுவர். இதற்கென நடப்பு நிதியாண்டில் 217 கோடியே 63 லட்சம் ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம், மொத்தம் 44,984 அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 34.64 இலட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறுவர். இத்திட்டத்திற்காக ஒட்டுமொத்தமாக 724 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தாலும், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தாலும், ஊரகப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக சுயஉதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு அந்தந்தப் பள்ளிகளிலேயே காலை உணவு தயாரித்து வழங்கப்படும்.
மாணவர்களின் உடல் நலம், ஊட்டச்சத்து, பள்ளி வருகை, கற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, பள்ளிக் கல்வியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கல்விப் பயணத்திற்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பெரும் துணையாக அமையும்.







