கோவில்பட்டி பழைய அப்பனேரியில் 23-ந் தேதி ஆதார் சிறப்பு முகாம்
கோவில்பட்டியை அடுத்த பழைய அப்பனேரி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் நலனுக்காக 23-ந் தேதி புதன்கிழமை ஆதார் சிறப்பு முகாம் நடத்தபப்டுகிறது. இந்திய அஞ்சல்துறை, கோவில்பட்டி தலைமை அஞ்சலகம் மூலமாக அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளின் உத்தரவின்பேரில் இந்த முகாம் நடைபெறுகிறது.
பழைய அப்பனேரி சமுதாய நலக்கூடத்தில் 23-:9.-2026 புதன் கிழமை காலை 9: 30 மணி முதல் மாலை 3.30 மணிவரை முகாம் நடக்கிறது, இந்த முகாமில் பெயர் திருத்தம், முகவரிமாற்றம், மொபைல் எண் சேர்த்தல் மற்றும்போட்டோ மாற்றம் உள்ளிட்ட அனைத்து வகையான ஆதார் திருத்தங்களும் செய்யப்படும்.

மேலும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக ஆதார் புதுப்பித்தல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதால் 10 ஆண்டுகள் முடிவுற்ற அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொல்லப்பட்டுள்ளனர், முகாமில் கலந்துகொள்வோர் தங்கள் ஆதார் அட்டை மற்றும் ரூ. 125/- கொண்டு வர வேண்டும்,
மற்ற திருத்தங்களுக்கு தேவையான சான்றுகளும் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புதிய ஆதார் எடுத்தல் மற்றும் 5- 7 வயது, 15 -17 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு
புதுப்பித்தல் கட்டாயம்.ஆகும். எனவே இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.







