தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீதம் மானியத்தில் ) நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் விஷூமகாஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2026-27-ம் ஆண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பதில் ஆர்வமுள்ளோர் “கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்) நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம்” செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு கோழிக்கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 […]
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) தகவல் தொழில் நுட்பவியல் துறை சார்பில் “தரவுகளை புரிதல்மிக்க நுண்ணறிவுகளாக மாற்றுதல்” என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. துறையின் மூன்றாமாண்டு மாணவிகள் சந்தியாஸ்ரீ வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினரை எம்.மார்க் செல்வ ஜோஸ்னா அறிமுகம் செய்தார். ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சிறப்பு விரிவுரையாளர் எ.மொஸிராணி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிலரங்கம் தலைப்பினை பற்றி சிறப்புரை ஆற்றினார். இதன்மூலம் இத்துறை மாணவர்கள் இத்தலைப்பு தொடர்பான […]
தூத்துக்குடி மாவட்ட ம்தட்டப்பாறையில் இருந்து கீழதட்டப்பாறை செல்லும் வழியில் ஒரு குவாரி அருகில், கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சமுத்திரம் (வயது 40) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் நடத்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த மந்திர சூடாமணி மகன் ஆறுமுகம் (36/26) மற்றும் திருநெல்வேலி மாவட்டம், பவுல் கணபதியாபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் துரைபாண்டி (32/26) ஆகிய இருவரையும் தட்டப்பாறை […]
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன் 1974-77 ம் ஆண்டு கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ஒவ்வொரு மாதமும் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான இலவச கண் பரிசோதனை முகாம் 27-9-2026 ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் காலை 9 […]
சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஎஸ் பாபு. தவெக எம்.எல்.ஏவான இவருக்கு கடந்த 9 ஆம் தேதி அதிகாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் குடும்பத்தினர் உடனடியாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை ஐசியூவில் அனுமதித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஓரிரு நாட்களில் உடல் நலம் தேறி வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஎஸ் பாபு உடல் நிலையை தீவிரமாக […]
முதலமைச்சர் கோப்பைக்கான தூத்துக்குடி மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான ஆக்கி போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்றது. பல்வேறு கட்டத்தை கடந்து இறுதிபோட்டிக்கு கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். மற்றும் கே.ஆர்.கலைக்கல்லூரி அணிகள் தகுதி பெற்றன. இரண்டாம் நாள் போட்டிகள் இன்று 23-ந் தேதி நடந்தன. காலை 6.30 மணி அளவில் ஆண்கள் அணி இறுதிப்போட்டி நடைபெற்றது கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். மற்றும் கே.ஆர்.கலைக்கல்லூரி அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் 4-3 என்ற […]
அஞ்சலகங்களில் ஆண்டுக்கு ரூ.559 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு திட்டம் இருப்பதாக தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வை. தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ (IPPB), பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு ரூ. 559 மற்றும் ரூ. 759 பிரீமியத்தில் ரூ. 10 லட்சம் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சாதாரண […]
மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினரும், விநாயகா மெடிக்கல் மற்றும் விநாயகா டிராவல்ஸ் உரிமையாளருமான விநாயகா ஜி. ரமேஷின் தாயாரும், வழக்கறிஞர் குரு ராமச்சந்திரன் மனைவியுமான ஜி. சாரதா இன்று (23.9.2026) புதன்கிழமை காலை 5 மணியளவில் காலமானார்.] அன்னாரது இறுதி சடங்குகள் நாளை 24.9.2026 வியாழக்கிழமை காலை 11மணியளவில் விஜயாபுரியில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சாரதா மறைவிற்கு மதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினர் ஆழ்ந்த இரங்கலை […]
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் 55 துறைகள் இயங்கி வருகின்றன. இதில், மக்களுக்கு சேவை அளிக்கும் துறைகள் 22 ஆகும். இந்த சேவைத் துறைகளை மக்கள் நாடும்போது, அங்குள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்களில் பெரும்பாலானோர் லஞ்சம் வாங்கிக் கொண்டே கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றனர். அடிக்கடி அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சார்-பதிவாளர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றை குறிவைத்து அதிரடி சோதனையில் […]
கடந்த 2021 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த கலங்கரையான் மகன் முத்தையா (63/26) என்பவரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மேற்படி நீதிமன்ற நீதிபதி முருகன் அவர்கள் […]







