கோவில்பட்டியில் 27 ம் தேதி இலவச கண் பரிசோதனை முகாம்
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன் 1974-77 ம் ஆண்டு கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ஒவ்வொரு மாதமும் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகின்றன.
அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான இலவச கண் பரிசோதனை முகாம் 27-9-2026 ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படுகிறது.
அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி நடைபெறும் இந்த முகாமில் கலந்து கொள்வோர் ஆதார் கார்டு நகல் மற்றும் செல் நம்பர் கொண்டு வரவேண்டும்.

தேர்வு செய்யப்படும் கண்புரை நோயாளிகள் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு உள்விழி (IOL) லென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசம். அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறுபரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண்விழித் திரையில் அறிகுறி இல்லாமலேயே பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.எனவே இம்முகாமில் கலந்து கொண்டு உங்கள் விழித்திரையை பரிசோதனை செய்து கொள்ளலாம்.
கண்நீர் அழுத்த நோய் 40 வயதிற்கு மேல் எந்த வித அறிகுறியும் இல்லாமல் கண் பார்வையை பாதிக்க வாய்ப்புண்டு. இந்த முகாமில் தங்களது கண்நீர் அழுத்தத்தை பரிசோதனை செய்து கொள்ளலாம்.
பிறவி கண்புரை, மாறுகண், பிறவி கண்நீர் அழுத்த நோய் மற்றும் மாலைக்கண் ஆகிய நோய் உள்ள குழந்தைகளை இம்முகாமிற்கு அழைத்து வந்து கண் பரிசோதனை செய்து கொள்ளலாம்

கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து : உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிகள் ரூ.300 விலையிலிருந்து முகாம் நடக்கும் இடத்திலேயே கிடைக்கும்
இம்முகாமில் கலந்துகொள்வோருக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. முகாம் தொடர்பான சந்தேகங்களுக்கு ஜி.ஜெயராஜ் 94434 55679,என்.ராஜவேல் 94880 72316 கே.மணிக்கொடி 97892 12332, கே.கே.பாலசுப்பிரமணியம் 94435 27495 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்







