கோவில்பட்டியை சேர்ந்தவரை அரிவாளால் தாக்கிய வழக்கில் 2 பேருக்கு தலா 7 வருடம் ஜெயில்
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்ட ம்
தட்டப்பாறையில் இருந்து கீழதட்டப்பாறை செல்லும் வழியில் ஒரு குவாரி அருகில், கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சமுத்திரம் (வயது 40) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் நடத்தது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த மந்திர சூடாமணி மகன் ஆறுமுகம் (36/26) மற்றும் திருநெல்வேலி மாவட்டம், பவுல் கணபதியாபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் துரைபாண்டி (32/26) ஆகிய இருவரையும் தட்டப்பாறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. நீதிபதி மகேஸ்வரி நேற்று (23.9.2026) ஆறுமுகம் மற்றும் துரைப்பாண்டி ஆகிய இருவரையும் குற்றவாளி என உறுதி செய்து அவர்களுக்கு தலா 7 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,500/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.







