தகவல் தொழில் நுட்பவியல் துறை பயிலரங்கம்
Oplus_16908288
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) தகவல் தொழில் நுட்பவியல் துறை சார்பில் “தரவுகளை புரிதல்மிக்க நுண்ணறிவுகளாக மாற்றுதல்” என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது.
துறையின் மூன்றாமாண்டு மாணவிகள் சந்தியாஸ்ரீ வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினரை எம்.மார்க் செல்வ ஜோஸ்னா அறிமுகம் செய்தார்.
ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சிறப்பு விரிவுரையாளர் எ.மொஸிராணி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிலரங்கம் தலைப்பினை பற்றி சிறப்புரை ஆற்றினார்.

இதன்மூலம் இத்துறை மாணவர்கள் இத்தலைப்பு தொடர்பான மென்பொருள் மற்றும் அதன் நடைமுறை அறிவைப் பெற்று, தொழில்முறை திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. இறுதியாக துறையின் மூன்றாமாண்டு மாணவி கே.மொசிலின் நன்றி கூறினார்.
இப்பயிலரங்க ஏற்பாடுகளை தகவல் தொழில் நுட்பவியல் துறைத் தலைவர் ர.வீரலட்சுமி ஒத்துழைப்போடு துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.







