போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
Oplus_16908288
கடந்த 2021 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த கலங்கரையான் மகன் முத்தையா (63/26) என்பவரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மேற்படி நீதிமன்ற நீதிபதி முருகன் அவர்கள் நேற்று (22.9.2026) மேற்படி முத்தையாவை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 20 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார்.
மேலும் ரூ. 1 லட்சத்து 2 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.







