கோவில்பட்டி: மின்தடையால் ஆதார் சிறப்பு முகாம் நாளைக்கு ஒத்திவைப்பு
கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாதராந்திர பராமரிப்பு பணிக்காக 22-ந்தேதி (நேற்று) மின்தடை செய்யப்படும் என்று கொட்ட மின் பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டார். பின்னர்நிர்வாக் காரணங்களால் மின் தடை ரத்து செய்யப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது,. பின்னர் திடீரென மறுநாள் (இன்று) காலை 9 மணி முதல் மதியம் 2 ,மணி வரை ,மின்தடை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
இதற்கிடையே கோவில்பட்டியை அடுத்த பழைய அப்பனேரி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் நலனுக்காக 23-ந் தேதி புதன்கிழமை ஆதார் சிறப்பு முகாம் நடப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது
,

.பழைய அப்பனேரி சமுதாய நலக்கூடத்தில் 23-:9.-2026 புதன் கிழமை காலை 9: 30 மணி முதல் மாலை 3.30 மணிவரை நடைபெறும் முகாமில் பெயர் திருத்தம், முகவரிமாற்றம், மொபைல் எண் சேர்த்தல் மற்றும்போட்டோ மாற்றம் உள்ளிட்ட அனைத்து வகையான ஆதார் திருத்தங்களும் செய்யப்படும். என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்றைய மின்தடை காரணமாக ஆதார் சிறப்பு முகாம் ரத்து செய்யப்பட்டு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பழைய அப்பனேரியில் இன்று நடப்பதாக இருந்த ஆதார் சிறப்பு முகாம் நாளை (24.9.2026) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,.







