கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம், பயன்பாட்டுக்கு வந்ததா? இல்லையா?
இன்று காலையில் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்துக்கு வெளியே நின்று சென்ற வெளியூர் பஸ்கள்.
கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு கடந்த 2007ம் ஆண்டு பைபாஸ் சாலையில் கூடுதல் பஸ் நிலையம் அமைக்கபட்டு திறக்கப்பட்டது. ஒரு சில வருடங்களில் இந்த பஸ் நிலையம் செயல்படாமல் போனது.. இதனால் அனைத்து பஸ்களும் கூடுதல் பஸ் நிலையத்திற்குள் செல்லமால் சர்வீஸ் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி, இறக்கி சென்று வந்தன,. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன,
சென்னையில் இருந்து கோவில்பட்டியை கடக்கும் ஆம்னி பஸ்கள் மற்றும் அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் கோவில்பட்டியில் பஸ் நிலையம் செல்லாமல் நான்கு வழிசாலையில் ஆபத்தான வகையில் பயணிகளை இறக்கி விட்டு சென்றனர்,. அது போல் பஸ் நிலையம் வெளியே வெயில், மழைக் காலம் என்று காத்த்திருக்கும் பயணிகளை பஸ்கள் ஏற்றிச்சென்று வந்தன

மாவட்ட அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்கள் நேரில் பார்வையிட்டு சென்றும் எந்தவித பயனும் நடக்கவில்லை. கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து ஊரின் மையப்பகுதியில் செயல்படும் அண்ணா பஸ் நிலையம் செல்ல அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்களால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்த நிலையில் கூடுதல் பஸ் நிலையம் செயல்பாடு இல்லாமல் இருந்தது,.
கொரோனா காலகட்டத்தில் இந்த பஸ் நிலையம் காய்கறி மார்க்கெட்டாக செய்லபட்டது. பின்னர் அதுவும் இல்லாமால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்த பஸ் நிலையம் சீரமைக்கப்பட்டது. பஸ்கள் எதுவும் வந்து செல்லாத் பஸ் நிலையத்துக்கு கோடிக்கணக்கில் பணம் செல்வளிப்பதா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
இந்த நிலையில் நேற்று கோவில்பட்டி தாசில்தார் தலைமையில் சமூக ஆர்வலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. உடனடியாக இரவோடு இரவாக கோவில்பட்டியை கடக்கும் அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்த்துக்குள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
பஸ் நிலையத்துக்கு வெளியே தடுப்புகள் வைத்து பஸ்களை பஸ் நிலையத்துக்குள் சென்று வரும்படி போலீசார் வலியுறுத்தினார்கள் கோவில்பட்டி வழியாக செல்லும் அனைத்து அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் கூடுதல் பஸ் நிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர், அதன்படி நேற்று இரவில் அனைத்து பஸ்களும் கூடுதல் பஸ் நிலையத்துக்குள் வந்து சென்றன.
அதே சமயம் இன்று காலையில் இருந்து எந்த பஸ்சும் கூடுதல் பஸ் நிலையம் உள்ளே செல்லவில்லை. வழக்கம் போல் பஸ் நிலையத்துக்கு வெளியே சாலையில் நின்று பயணிகளை ஏற்றி சென்றன. போலீசாரும் கண்ணில் தென்படவில்லை.

பஸ் நிலையம் அருகே உள்ள கடைகளில் விசாரித்த போது போலீசார் இருக்கும் போது மட்டும் பஸ்கள் உள்ளே சென்று வருகின்றன, மற்ற நேரங்களில் வழக்கம் போல் ரோட்டிலேயே நின்று பயணிகள் ஏற்றி செல்கின்றன” என்று தெரிவித்தனர்,.
எனவே கூடுதல் பஸ் நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்ததா? இல்லையா ? என்பது கேள்விக்குறியாக உள்ளது. தாசில்தார் கூட்டிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அமல்படுத்தப்படுவதில் என்ன இடையூறு என்று தெரியவில்லை. அதனை போக்குவரத்து கழக அதிகாரிகள் வெளிப்படையாக சொல்லி விட்டால் மக்களும் கூடுதல் பஸ் நிலையத்தை மறந்து விட்டு வழக்கம் போல் கஷ்டத்தை அனுபவிக்க தொடங்கி விடுவார்கள்….!







