மாவட்ட ஆக்கி: எஸ்.எஸ்.டி. எம்.,கே. ஆர். கலை கல்லூரிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி
Oplus_16908288
முதலமைச்சர் கோப்பைக்கான தூத்துக்குடி மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான ஆக்கி போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் இன்று 22 ஆம் தேதி காலை 8 மணி அளவில் போட்டிகள் தொட ங்கின.
இப் போட்டியை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி ரத்தின ராஜா தலைமையில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் தொடக்கி வைத்தார். ஆக்கி பயிற்சியாளர்கள் முத்துக்குமார், மற்றும் ஹானஸ்ட் ராஜ், வீரர்களை அறிமுகம் செய்து வைத்தனர்.
இப்போட்டியில் 6 கல்லூரிகள் விளையாடின. நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரி, கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி, கோவில்பட்டி எஸ் எஸ் துரைசாமி மாரியம்மாள் நினைவுக் கல்லூரி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் ஆகிய அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

முதல் போட்டியில் கோவில்பட்டி எஸ்.எஸ். டி. எம். கல்லூரி அணி 6- 0 என்ற கோல் கணக்கில் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியை வீழ்த்தி வெற்றி பெற்றது.இரண்டாவது போட்டியில் கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி அணி 4-0 என்ற கோல் கணக்கில் நேஷனல் பொறியியல் கல்லூரியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாகலாபுரம் அரசு கல்லூரி அணி 6-0 என்ற கோல் கணக்கில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியை தோற்கடித்து வெற்றி பெற்றது. முதலாவது அரை இறுதி போட்டியில் கோவில்பட்டி எஸ் எஸ் டி. எம்.கல்லூரி அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி அரசு கல்லூரியை வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது அரை இறுதி போட்டியில் கோவில்பட்டி கே ஆர் கலைக்கல்லூரி அணி 4-0 என்ற கோல் கணக்கில் நாகலாபுரம் அரசு கல்லூரியை வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் கோவில்பட்டி அரசு கலைக் கல்லூரி 3-0 என்ற கோல் கணக்கில் நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியை தோற்கடித்து வெற்றி பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
இறுதிப் போட்டியில் கே ஆர் கலைக்கல்லூரி மற்றும் எஸ்.எஸ். டி. எம். கல்லூரி அணிகள் நாளை 23-ந்தேதி காலை 6:30 மணிக்கு சந்திக்கின்றன.

நாளை காலை 8 மணி முதல் மாலை வரை பெண்கள் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற உள்ளன.
இன்றைய போட்டியில் நடுவர்களாக காளிதாஸ், மதன்குமார், மாரியப்பன், வேல்முருகன், முகேஸ்வரி, புகழேந்தி ,ஆனந்த பிரபாகரன், சுதாகர், முருகன் ஆகியோர் பணியாற்றினர் போட்டிக்கான ஏற்பாடுகளை ஆக்கி பயிற்சியாளர் முத்துக்குமார் ஹானஸ்ட் ராஜ் செய்து வருகிறார்கள்.







