முதலமைச்சர் கோப்பைக்கான ஆண்கள் ஆக்கி போட்டி: கோவில்பட்டி எஸ்.எஸ். டி.எம். கல்லூரி அணி `சாம்பியன்’
சாம்பியன் பட்டம் பெற்ற கோவில்பட்டி எஸ்.எஸ். டி.எம். கல்லூரி அணி

முதலமைச்சர் கோப்பைக்கான தூத்துக்குடி மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான ஆக்கி போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்றது. பல்வேறு கட்டத்தை கடந்து இறுதிபோட்டிக்கு கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். மற்றும் கே.ஆர்.கலைக்கல்லூரி அணிகள் தகுதி பெற்றன.
இரண்டாம் நாள் போட்டிகள் இன்று 23-ந் தேதி நடந்தன. காலை 6.30 மணி அளவில் ஆண்கள் அணி இறுதிப்போட்டி நடைபெற்றது கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். மற்றும் கே.ஆர்.கலைக்கல்லூரி அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் கே ஆர் கலைக்கல்லூரி அணியை வீழ்த்தி எஸ்.எஸ்.டி.எம்.கல்லூரி அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பெற்று `சாம்பியன்’ பட்டத்தை தட்டி சென்றது,

அதை தொடர்ந்து நடந்த பெண்களுக்கான ஆக்கி போட்டியில் மொத்தம் 4 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. முதல் போட்டியில் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் A அணியினர் செயின்ட் மேரிஸ் B அணியினரை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றனர்
இரண்டாவது அரை இறுதி போட்டியில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் பெண்கள் கல்லூரி அணி 2-0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி ஜி.வி.என். கல்லூரி அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது
மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் கோவில்பட்டி ஜி.வி,.என். கல்லூரி அணி 5-0 என்ற கோல் கணக்கில் செயின்ட் மேரிஸ் B அணியினரை வீழ்த்தி வெற்றி பெற்றனர்
தொடர்ந்து நடந்த இறுதி போட்டியில் செயின்ட் மேரிஸ் A அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் பெண்கள் கல்லூரி அணியை தோற்கடித்து வெற்றி பெற்று முதல் இடம் பெற்றது. இறுதி போட்டியில் தோல்வி அடைந்த ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் பெண்கள் கல்லூரி இரண்டாவது இடம் பிடித்தது.
தூத்துக்குடியில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் ரொக்கப்பரிசு வழங்கப்படும், ஆண்கள் அணியில் முதலிடம் பெற்ற பெற்ற கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் அணி வீரர்கள் மற்றும் பெண்கள் அணியில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் பெண்கள் கல்லூரி அணி வீராங்கனைகள் ஆகியோருக்கு தலா ரூ 3000 வீதம் ரொக்க பரிசு வழங்கப்படும்,
இரண்டாம் இடம் பெற்ற கே ஆர் கலைக்கல்லூரி அணி வீரர்கள் மற்றும் ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் பெண்கள் கல்லூரி அணி வீராங்கனைகளுக்கு தலா ரூ. 2000 பரிசும் மூன்றாம் இடம் பெற்ற கோவில்பட்டி அரசு கலைக் கல்லூரி அணி வீரர்கள் மற்றும் கோவில்பட்டி ஜி.வி.என். கல்லூரி அணி வீராங்கனைகளுக்கு தலா ரூ. 1௦௦௦ வீதம் பரிசு வழங்கப்படும்,

இன்றைய போட்டி தொடக்க நிகழ்ச்சியில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா துணைச் செயலாளர் ஜார்ஜ் ஈஸ்டர் மற்றும் மூத்த வீரர்கள் போட்டியில் நடுவர்களாக காளிதாஸ், மதன்குமார், மாரியப்பன், வேல்முருகன், முகேஸ்வரி, புகழேந்தி ,ஆனந்த பிரபாகரன், சுதாகர், முருகன், பணியாற்றினர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஹாக்கி பயிற்சியாளர் முத்துக்குமார் ஹானஸ்ட் ராஜ் செய்திருந்தனர்
ஆண்கள் அணியில் முதலிடம் பெற்ற கோவில்பட்டி எஸ். எஸ். டி..எம். கல்லூரி. அணியில் சிறப்பாக விளையாடிய உடற்கல்வித்துறை மாணவர்கள் கிருஷ்ணன், விஷால் மற்றும் ஆக்கி அணியில் உள்ள அனைத்து மாணவர்களையும் கல்லூரி செயலாளர் ரொட்டேரியன் கண்ணன், கல்லூரி முதல்வர் முனைவர் செல்வராஜ், உடற்கல்வித்துறை தலைவர் செல்லத்துரை, பேராசிரியர்கள் ரமேஷ் பாண்டியன், வெங்கடேஷ், கல்லூரி நிர்வாகத்தினர் , பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் பாராட்டு தெரிவித்தனர்.







