தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, பின்னர் சார் ஆட்சியர் மங்கள் ஷுமாயுன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:- * இந்திய தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் ,மீது சக ஆணையர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில்.அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். * ஜனநாயகத்திற்கு எதிராக 15 கோடி வாக்காளர்களை […]
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான பாலியல் வழக்கு நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் வீரமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கை காவல்துறை அதிகாரிகள் முடித்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில் கூறியதாவது; திமுக ஆட்சி காலத்தில், ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான பாலியல் புகார் […]
பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி மீதான பாலியல் வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மூலம் சீரழித்த குற்றத்துக்காக வீரமணி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் புகார் அளித்த போது முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடங்கி உள்ளது. அந்தவகையில், இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி எந்த தகவலையும் கண்டறிய முடியவில்லை என கோர்ட்டில் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்து.. அதில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், இந்திய தேர்தல் கமிஷனிடம், தேர்தல் வரவு- செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தங்களின் தேர்தல் செலவின பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளன. அதன்படி தி.மு.க. ரூ.197 கோடி செலவு செய்துள்ளது. தி.மு.க. தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு […]
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் சுயநிதிபாடப்பிரிவின் இளைய ஜேசி பிரிவு மற்றும் இளைஞர் நலக் குழு ஆகியவை இணைந்து “பட்டப்படிப்பைத் தாண்டி நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் சுயநிதிபாடப்பிரிவுகளின் இயக்குநர் பா.மகேஷ்குமார் வழிகாட்டுதலின் படி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் வணிகவியல் தொழில் நெறிகணக்கியல் துறை உதவிப் பேராசிரியர் ச.மகேஷ்பாபு வரவேற்று பேசினார். கல்லூரியின் இயக்குநர் பா.மகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார் ஆங்கில முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி […]
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 25-ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன. அதனைத் தொடர்ந்து, அனைத்து வகையான அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்குப் பிறகு அக்டோபர் 5 (திங்கட்கிழமை) அன்று அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் இயங்கும் எனப் பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை […]
தமிழ்நாடு முழுவதும் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 91வது பிறந்த நாள் இன்று செப்டம்பர் 24 ந் தேதி கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் மாவட்ட துணை தலைவரும், திமுக மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளரும், 14 வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான தவமணி தலைமையில் சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. செக்கடி தெருவில் உள்ள அலுவலகம் முன்பு நடந்த நிகழ்ச்சியின் போது சிவந்தி […]
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் எஸ்.எஸ்.டி. எம்.கல்லூரி மாணவர்கள் பனை விதைகள் நட்டனர்
தேசிய நாட்டு நலப்பணித் திட்ட தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், “ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி”யின் ஒரு அங்கமாக இன்று 24.9.2026 காலை கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி கண்மாயில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி எஸ். எஸ்.டி. எம். கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 115 & 118 மற்றும் நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். கல்லூரி […]
2026-ம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் செலவு கணக்கை அதிமுக. தாக்கல் செய்தது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணைய செயலாளருக்கு அனுப்பியுள்ள அறிக்கையின்படி, தேர்தல் பிரசாரம் மற்றும் கட்சிப் பணிகளுக்காகக் ஒட்டுமொத்தமாக ரூ.109,61,81,982 செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுகவின் மொத்த தேர்தல் செலவு 112 கோடியே 39 லட்சத்து 88 ஆயிரத்து 992 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது; அதிமுகவின் தேர்தல் செலவில். நாளிதழ்கள், தொலைக்காட்சி, சமூக வலைதள விளம்பரங்கள் […]
‘ஜெம் கிரானைட்’ அதிபர் வீர மணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மூலம் சீரழித்த குற்றத்துக்காக ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். வீரமணி ‘போக்சோ’ வழக்கில் சிக்கியது பற்றி நேற்று திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டது. அவரிடம் ரூ.70 கோடி பணத்தை வாங்கிக்கொண்டு அவரை சிக்க வைத்தவர்கள் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் வீரமணியோடு சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கனும் கைது செய்யப்பட்டனர். இவர்களுடைய […]







