சிவந்தி ஆதித்தனார் 91 வது பிறந்தநாள் விழா
தமிழ்நாடு முழுவதும் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 91வது பிறந்த நாள் இன்று செப்டம்பர் 24 ந் தேதி கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் மாவட்ட துணை தலைவரும், திமுக மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளரும், 14 வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான தவமணி தலைமையில் சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

செக்கடி தெருவில் உள்ள அலுவலகம் முன்பு நடந்த நிகழ்ச்சியின் போது சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.







