• November 11, 2026

சட்டசபை தேர்தலில் திமுக செலவு  ரூ.197 கோடி

 சட்டசபை தேர்தலில் திமுக செலவு  ரூ.197 கோடி

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்து.. அதில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், இந்திய தேர்தல் கமிஷனிடம், தேர்தல் வரவு- செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தங்களின் தேர்தல் செலவின பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளன. அதன்படி தி.மு.க. ரூ.197 கோடி செலவு செய்துள்ளது.

தி.மு.க. தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக தி.மு.க.விடம் ரூ.365 கோடி கையிருப்பு இருந்துள்ளது. தேர்தல் காலத்தில் நன்கொடைகள் மூலம் ரூ.126 கோடி வசூலாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மொத்தமாக ரூ.197.84 கோடியை செலவிட்டுள்ளது. பத்திரிகை, டி.வி. மற்றும் சமூக வலைத்தள விளம்பரங்களுக்காக ரூ.70 கோடி செலவிடப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோரின் விமானப் பயணங்களுக்காக ரூ.5.90 கோடி செலவிடப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் ரூ.149.89 கோடியை தி.மு.க. செலவு செய்துள்ளது.

இதற்காக மு.க.ஸ்டாலினுக்கு ரூ.2.66 கோடியும், கமல்ஹாசனுக்கு ரூ.3.24 கோடியும் செலவிடப்பட் டுள்ளது. மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரிசனின் ‘பென்’ நிறுவனத்துக்கு ரூ.6.61 கோடி வழங்கப்பட்டுள்ளது. கட்சி வேட்பாளர்கள் பலருக்கு தேர்தல் நிதியாக தலா ரூ.25 லட்சத்தை தி.மு.க. வழங்கியுள்ளது. தேர்தல் செலவுகள் போக, தி.மு.க.விடம் மீதம் ரூ.319.39 கோடி இருக்கிறது.

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தலுக்கு முன்பு கட்சியின் கணக்கில் ரூ.19 லட்சம் இருந்தது. தேர்தல் நேரத்தில் ரூ.2.20 கோடி வசூலானது. தேர்தலில் அக்கட்சி மேற்கொண்ட மொத்த செலவு ரூ.1.37 கோடியாகும்.

 பிரசாரம் மற்றும் விளம்பரங்க ளுக்காக ரூ.93 லட்சம், வேட்பாளர்களுக்கான செலவுக்காக ரூ.44 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

வேட்பாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் சீமான் உள்ளிட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை கட்சி நிதி வழங்கியுள்ளது. தேர்தல் முடிந்தபிறகு அக்கட்சியின் வசம் ரூ.64 லட்சம் இருப்பில் உள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *