கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
Oplus_16908288
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் சுயநிதிபாடப்பிரிவின் இளைய ஜேசி பிரிவு மற்றும் இளைஞர் நலக் குழு ஆகியவை இணைந்து “பட்டப்படிப்பைத் தாண்டி நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரியின் சுயநிதிபாடப்பிரிவுகளின் இயக்குநர் பா.மகேஷ்குமார் வழிகாட்டுதலின் படி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரியின் வணிகவியல் தொழில் நெறிகணக்கியல் துறை உதவிப் பேராசிரியர் ச.மகேஷ்பாபு வரவேற்று பேசினார். கல்லூரியின் இயக்குநர் பா.மகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார் ஆங்கில முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி எஸ்.ஜீவநந்தினி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

சிறப்பு விருந்தினராக சாத்தூர் ஆரோ வேர்ல்ட் நிறுவனர் ஜெயந்தி வெங்கட் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாணவ, மாணவியர்கள் கல்லூரி கல்வியை வெற்றிகரமாக முடிப்பது மட்டுமே வாழ்க்கையின் இறுதி இலக்காக இருக்கக்கூடாது. கல்வியுடன் தங்களது தனித்திறன், தன்னம்பிக்கை, வாழ்க்கைத் திறன் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக ஆங்கிலத்துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் ஞா.பிரின்ஸ் ரத்தினசிங் நன்றி கூறினார்.







