தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
பின்னர் சார் ஆட்சியர் மங்கள் ஷுமாயுன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-
* இந்திய தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் ,மீது சக ஆணையர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில்.அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

* ஜனநாயகத்திற்கு எதிராக 15 கோடி வாக்காளர்களை நீக்கிய ஞானேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
*சக தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலை பெறாமல் ஜனநாயகத்துக்கு விரோதமாக, சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற பிகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களும் ரத்து செய்யப்பட்டு மறு தேர்தல் நடத்திட வேண்டும்.
* தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தன,

ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க தமிழரசன், இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநில துணைத்தலைவர் அபிராமி முருகன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், இந்திய தேசிய காங்கிரஸ் துரைராஜ் ராஜசேகரன், பழனிச்சாமி, மக்கள் நீதி மய்யம் கல்லூரணி ராதாகிருஷ்ணன், திராவிட கழகம் செண்பகராஜ், வினோபா, பகத்சிங் ரத்ததான கழகம் மா காளிதாஸ், லட்சுமணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







