பல்கலைக்கழக ஆக்கிப்போட்டி: கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம்.கல்லூரி அணி `சாம்பியன்’
Oplus_16908288
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆக்கிப்போட்டி கோவில்பட்டி கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 9 கல்லூரி அணிகள் தகுதி பெற்று, இப்போட்டியில் கலந்து கொண்டன.
போட்டியின் பரபரப்பான் ஆட்டங்களின் இறுதியில் கோவில்பட்டி எஸ். எஸ்.டி.எம். கலைக்கல்லூரியும் நாகலாபுரம் அரசு கலைக்கல்லூரியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

அதை தொடர்ந்து இன்று 25.9.2026 காலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி அணியும் நாகலாபுரம் அரசு கல்லூரி அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் எஸ்.எஸ்.டி.எம்.கல்லூரி அணி 3-1 என்ற கோல் கணக்கில், எதிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது,
சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரிச் செயலாளர் கண்ணன், கல்லூரி முதல்வர் செல்வராஜ், கல்லூரி உடற்கல்வித்துறை தலைவர் செல்லத்துரை, ரமேஷ் பாண்டியன், வெங்கடேஷ், காளிராஜ், கல்லூரி நிர்வாகக் குழு, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் பாராட்டினர்.







