• November 11, 2026

அதிமுகவின் தேர்தல் செலவு  ரூ.112 கோடியே 39 லட்சம்

 அதிமுகவின் தேர்தல் செலவு  ரூ.112 கோடியே 39 லட்சம்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் செலவு கணக்கை அதிமுக. தாக்கல் செய்தது  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணைய செயலாளருக்கு அனுப்பியுள்ள அறிக்கையின்படி, தேர்தல் பிரசாரம் மற்றும் கட்சிப் பணிகளுக்காகக் ஒட்டுமொத்தமாக ரூ.109,61,81,982 செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிமுகவின் மொத்த தேர்தல் செலவு 112 கோடியே 39 லட்சத்து 88 ஆயிரத்து 992 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது; அதிமுகவின் தேர்தல் செலவில். நாளிதழ்கள், தொலைக்காட்சி, சமூக வலைதள விளம்பரங்கள் உள்ளிட்ட பிரச்சாரப் பணிகளுக்காக மட்டும் சுமார் ரூ.103.98 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்காக ரூ.1.28 கோடி செலவாகியிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் கட்சி சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்களுக்காக ரூ.17.37 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் அதிமுக தெரிவித்துள்ளது.இதில் கவனம் ஈர்க்கும் மற்றொரு விஷயம் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரச் செலவு. அவரது பிரச்சாரப் பயணத்துக்காக ரூ.1.75 லட்சமும், வாகன டீசல் செலவுக்காக ரூ.4.14 லட்சமும் கணக்கில் காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கைகள், பார்ம்-ஏ, பார்ம்-பி உள்ளிட்ட படிவங்களைத் தயாரித்து அச்சிடுவதற்காக ரூ.4.11 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தேர்தல் களத்தில் ரூ.109 கோடிக்கு மேல் செலவு செய்திருந்தாலும், தேர்தல் செலவுகள் அனைத்தும் போக அதிமுகவிடம் ரூ.296 கோடி நிதி கையிருப்பில் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *