கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி உடற்கல்வித் துறை சார்பில் சர்வதேச யோகா தின விழா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஆர். செல்வராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் கே, கண்ணன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. மூன்றாம் ஆண்டு உடற்கல்வி மாணவர் கட்டபொம்மன் வரவேற்புரையாற்றினார். மூன்றாம் ஆண்டு உடற்கல்வி மாணவர் ராகவின், யோகாவின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு யோகா பயிற்சிகள் மற்றும் செயல்விளக்கங்களை […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளராகப் பணியாற்றியவரும், கடந்த 2015-ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவருமான சி. மகேந்திரன், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சி. மகேந்திரன், “நடந்து முடிந்த தேர்தலில் தவெக சாதிய அரசியலைத் தோற்கடித்துக் காட்டியுள்ளது. ஊழலை ஒழிக்க முடியும் […]
கோவில்பட்டியில் சாலை விபத்துகளை தடுக்க ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தகோரி ஆர்ப்பாட்டம்; சார்
கோவில்பட்டியில் சாலை விபத்துக்களை தடுத்திட அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீற்படுத்திட கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது, ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் , செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, ஞானம், வினோபா, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், இந்திய கலாச்சார நட்புறவுக் […]
கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2025–2026 கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. விழுதுகள் முன்னாள் மாணவர் சங்கத்தின் பொருளாளர் ஜெயபாரதி வரவேற்று பேசினார். பள்ளித் தலைமை ஆசிரியர் மரியசெல்வி தலைமை தாங்கி, பேசினார், ஆஸ்கார் மற்றும் விவிஜே கேட்டரிங் கல்லூரி கல்விக்குழுமத் தலைவர் சுப்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அதனைத் தொடர்ந்து, 10ஆம் […]
கல்வியையும் வாசிப்பு பழக்கத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல அரும்பாடுபட்ட கேரள மாநிலத்தின் நூலக தந்தை என அழைக்கப்படும் பி. என்.பணிக்கரின் நினைவு தினமான ஜூன் 19 ம் தேதி தேசிய வாசிப்பு தினமாக 1996ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது தேசிய வாசிப்பு தினம் மக்களிடம் வாசிப்பழக்கத்தை அதிகரிக்கவும்,நூலகங்களின் பயன்பாடு மற்றும் புத்தகங்களின் அவசியத்தை உணர்த்துவது,கல்வி மற்றும் எழுத்தறிவை மேம்படுத்துவது,வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பித்திடவும் ஜூன் 19 முதல் 25 வரை தேசிய வாசிப்பு வாரமாகவும் கடைபிடிக்கப்படுகிறது கோவில்பட்டி […]
தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. முதலில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகு கவர்னர் அர்லேகர் உரை நிகழ்த்த தொடங்கினார். அவர் பேசி முடித்ததும், கவர்னர் உரையை தமிழில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாசித்தார். அதன்பின்னர், மீண்டும் தேசிய கீதம் பாடப்பட்டதும் கூட்டம் நிறைவடைந்தது. 2 முறை தேசிய கீதம் பாடப்பட்ட விவகாரம் சட்டசபையில் இன்று விவாதத்திற்கு வழிவகுத்தது. இது தொடர்பாக, சட்டசபையில் நடந்த விவாதம் […]
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்லாக்கு ரோடு ஜங்ஷன் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்… . அந்த விசாரணையில் அந்த நபர்கள் கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 42) மற்றும் கோவில்பட்டி ராஜீவ்நகரைச் சேர்ந்த முருகன்(62) என்பதும் அவர்கள் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட 54 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் […]
மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது; தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவந்து
தமிழக சட்டசபையில் இன்று முதல் அமைச்சர் ஜோசப் விஜய் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அரசினர் தனி தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:- காவிரி நடுவர் மன்றம் 5-2-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட்டு 16-2-2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை […]
2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான கோவில்பட்டி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.6.2026 (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் கோவில்பட்டி சார் ஆட்சியர் தலைமையில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தார் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகள் தொடர்பாக மனு அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
கோவில்பட்டியில் சாலை ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று (ஜூன் 18) மாலை பசுவந்தனை சாலையில் நடந்த விபத்தில் பள்ளிக்கூட ஆசிரியை மற்றும் அவரது மகள் ஆகியோர் உயிரிழந்தனர், இது பற்றிய விவரம் வருமாறு:- கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச்சேர்ந்தவர் ரமேஷ்(வயது (44) அவரது மனைவி வளர்மதி(37) மகள் அஷ்விகா(9). வளர்மதி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்,. அதே பள்ளியில் மகள் அஷ்விகா நான்காம் வகுப்பு படித்து வந்தார், இன்று […]







