கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் 25ந்தேதி நடக்கிறது

2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான கோவில்பட்டி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.6.2026 (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் கோவில்பட்டி சார் ஆட்சியர் தலைமையில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தார் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகள் தொடர்பாக மனு அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்








